17 லட்சம் கணக்குகள் முடக்கம்

புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின்படி, பொய் செய்திகள், வெறுப்பை ஏற்படுத்தும் தகவல்கள் போன்றவற்றை சமூக வலைதளங்கள் கண்டறிந்து நீக்க வேண்டும். இது தொடர்பான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மதாமாதம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி கடந்த நவம்பர், மாதத்தில், பல்வேறு காரணங்களுக்காக 17.53 லட்சம் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டன. இதில் 95 சதவீதம் வணிக ரீதியிலான பயன்பாடுகளுக்கானவை. புகார்கள் அடிப்படையில் விசாரணை நடத்தியும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என  தனது நடவடிக்கைகள் குறித்து வாட்ஸ் ஆப் சமூக வலைதளம் அறிக்கை வெளியிட்டுள்ளது.