நடந்து முடிந்த ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. 2016-ல் நடந்த தேர்தலில் வெறும் நான்கு இடங்களை மட்டுமே பெற்ற பாரதிய ஜனதா கட்சி, 2020-ல் நடந்து முடிந்துள்ள தேர்தலில் 48 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. முதல் இடத்தில் உள்ள தெலுங்கான ராஷ்ட்ரிய சமதியின் கட்சி கூட பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறவில்லை.
மாநகராட்சியின் மொத்த இடங்களான 150 வார்டுகளில் ஆட்சி அமைக்க வேண்டிய 75இடங்களை கூட பிடிக்க முடியவில்லை. 2016-ல் 88 இடங்களில் வெற்றி பெற்ற டி.ஆர்.எஸ். கட்சி தற்போது 55 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2016-ல் வெறும் 4
இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க. தற்போது 48 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. ஹைதராபாத் மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் 46.55 சதவீதமே வாக்கு பதிவாகியது. முஸ்லீம்கள் வாசித்த பகுதிகளில் வாக்கு சதவீதம் அதிகமாகவே
பதிவாகியுள்ளது. சுமார் 30 சதவீத இந்துக்கள் தேர்தலில் வாக்களிக்கவில்லை. இதன் காரணமகா 2016-ல் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 15.85 சதவீதம், 2020-ல் பெற்ற வாக்குகளின் சதவீதம் 18.28 சதவீதம் . ஆகவே முஸ்லீம்கள் முழுமையாக வாக்களித்துள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது பிரிவினைவாதிகளுக்கு ஆதரவான சூழ்நிலையை ஏற்படுத்தும்.
2016ஐ விட டி.ஆர்.எஸ். கட்சி 8.5 சதவீத வாக்குகளை குறைவாக பெற்றுள்ளது. 2016-ல் பாரதிய ஜனதா கட்சி தெலுங்கு தேச கட்சியுடன் கூட்டு சேர்ந்து தேர்தல் களம் கண்டது. 2016-ல் 10.34 சதவீத வாக்குகளை பெற்று வெறும் 4 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் 2020-ல் தனித்து நின்று 34.56 சதவீத வாக்குகளை பெற்றது மட்டுமில்லாமல், 48 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2016-ல் பா.ஜ.க. பெற்ற வாக்குகள் 3,46,253-ம், 2020-ல் 11,95,711 வாக்குகள் பெற்றுள்ளது. நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, டி.ஆர.எஸ்., தெலுங்கு தேச கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை பெற்றுள்ளது. என்ற உண்மையை எழுத கூட தமிழக ஊடகங்கள் முன் வரவில்லை. பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்ற பகுதிகள் எல்.பி. நகர் (லால்பகதூர் நகர் ) பகுதிக்குட்பட்ட 23 வார்டுகளில், 15 வார்டுகளில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக செகந்தராபாத் பகுதிகுட்பட்ட மொத்த வார்டுகள் 27-ல் 14 வார்டுகளில் வெற்றி வாகை சூடியுள்ளது. முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக வாழும் சார்மினார் பகுதியில் உள்ள மொத்த 36 வார்டுகளில், பாரதிய ஜனதா கட்சி 7 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. சார்மினார் பகுதியை போலவே, Khairatabad பகுதியில் உள்ள 27 வார்டுகளில் பாரதிய ஜனதா கட்சி 9 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.
பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி ஹைதராபாத்க்கு தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள எல்.பி.நகர் பகுதியாகும். இந்த பகுதியில் அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்கு வழி வகுத்த நிகழ்ச்சியாக கருதுவது. 2019 டிசம்பர் மாதம் 24ந் தேதி ஹைதராபாத்தில் ஆர்.எஸ்.எஸ். நடத்திய அணிவகுப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.
தென்கிழக்கு ஹைதரபாத் பகுதிகளான மன்சூராபாத், வனஸ்தாலிபுரம், மற்றும் ஹஸ்தினாபுரம் ஆகிய இடங்களில் இந்த அணிவகுப்பு தொடங்கி லால் பகதுஸர் நகர் கடக்கையில் உச்சம் அடைந்தது. அங்கிருந்து சரூர்நகர் உள்ள்ரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் சர்சங்க சாலக் மானினிய மோகன் பாவத் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்சியின் வீடியே வைரலாகியது. இது இந்துக்களிடம் ஏற்படுத்திய ஒற்றுமையின் காரணமாகவும், பா.ஜ.க. வெற்றிக்கு வழி வகுத்தது. எல்.பி.நகர் மற்றும் கிழக்கு ஹைதராபாத்தின் பெரும்பகுதி டி.ஆர்.எஸ். மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதிக்கம் செலுத்திய பகுதி. இவர்களுக்கு இணையாகவே
காங்கிரஸ் கட்சியும் சற்றே பலமானதாகவே இருந்தது. ஆனால் 2014க்கு பின்னால் காங்கிரஸ் பலவீனப்பட்டும், டி.ஆர.எஸ். கட்சியின் ஆறு ஆண்டு கால செயல்பாட்டின் மீது ஏற்பட்ட அதிர்ப்தியின் காரணமாகவும், ஏற்பட்ட வெற்றிடத்தை திட்ட மிட்ட ரீதியில் பா.ஜ.க. நிரப்பியது. மேலும் தேர்தல் காலத்தில் கட்சியின் தேசிய தலைவர்கள் நடத்திய பிரச்சாரத்தின் பலனாகவும் வெற்றி வாகை சூடியதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இந்த தேர்தலிலும் கவனிக்க வேண்டிய அம்சம் உள்ளது. 44 வார்டுகளில் வெற்றி பெற்ற ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி வேட்பாளர்கள் வாங்கி வாக்குகள் பற்றி விவரங்கள். சாரமினார். மற்றும் Khairatabad பகுதிகளில் வெற்றி பெற்ற ஏ.ஐ.எம.ஐ.எம். கட்சியின் வேட்பாளர்கள் வாங்கிய வாக்கு பற்றிய ஒரு விளக்கம். வார்டு எண் 31 – ஏ.ஐ.எம்.ஐ.எம். வேட்பாளர் வாங்கிய வாக்கு 12,388 இவருக்கு அடுத்தப்படியாக வாங்கிய வாக்கு 2,833 , வார்டு எண் 32–ல் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். வாங்கிய வாக்கு 20,717 அந்த வார்டில் இரண்டாவது வேட்பாளர் வாங்கிய வாக்கு 1,808 இதை போலவே 67, 68 போன்ற வார்டுகளில் ஏ.ஐ.எம்.ஐ.எம் வேட்பாளர்கள் வாங்கிய வாக்கிற்கும், தோற்ற வேட்பாளர் வாங்கி வாக்குக்கும் வித்தியாசம்மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாமாகும். அடிப்படையான காரணம் முஸ்லீம்கள் தங்கள் வாக்குகளை ஏ.ஐ.எம்.ஐ.எம்.க்கே வாக்களித்துள்ளார்கள். இது ஒவைசியின் திட்டத்தின் படி முஸ்லீம்களை ஒருங்கிணைக்கும் பணியாகும். இது ஆபத்தானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இத்திருணத்தில் டி.ஆர்.எஸ். கட்சியின் மாநில தலைவர் கூறிய கருத்து கவனிக்கதக்கது.
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் மாநிலத்தின் அரசியல் சமன்பாடுகளை மாற்றுவதில் முடிவடையும் என்பது தெளிவாகிறது என்றார். இந்த தேர்தல் மூலம் தெலுங்கான சட்ட மன்ற தேர்தல் வெற்றி வாய்ப்புகள் கூட மாறுவதற்கு வாய்பிருக்கிறது. ஏன் என்றால் ஹைதராபாத் மாநகராட்சியை ஒட்டி 25 சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன. இந்த 25 சட்ட மன்ற தொகுதிகளின் வாக்குகள் கணக்கிட்டால், பாரதிய ஜனதா கட்சி கனிசமான தொகுதிகளை கைப்பற்றும் என பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இந்த அலசல் கட்டுரையில் அகில உலக கட்சியான கம்யூனிஸ்ட்களின் பங்களிப்பு என்ன என்பதையும் கவனிக்க வேண்டும். வலதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து 21 தொகுதிகளில் போட்டியிட்டு, 21 தொகுதிகளிலும் டெப்பாஸிட் இழந்தனர். இவர்கள் வாங்கிய மொத்த ஓட்டே 6,210 அதாவது 0.17 சதவீதம் வாக்குகள். ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் நோட்டா க்கு விழுந்த வாக்குகள் 29,076 கிட்டத்தட்ட 0.84 சதவீதம் நோட்டாவிற்கு போட்ட வாக்குகளில் 25 சதவீதத்திற்கு குறைவான வாக்குகளை பெற்றவர்கள் தான் மோடியை விமர்சனம் செய்கிறார்கள்.
1947-ல் ஆந்திர மாநிலம் கம்யூனிஸ்ட்களின் கோட்டையாக கருதப்பட்டது என்பதை தற்போது நினைத்தால் கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறிய கதைதான் நினைவுக்கு வருகிறது.