ஹிந்து முன்னணி மாநில பொதுக்குழு கூட்டம் செம்டம்பர் மாதம் 16, 17 தேதிகளில் திருப்பூர் வித்யா கார்த்தி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். நிறுவன அமைப்பாளர் ராம. கோபாலன், மாநில அமைப்பாளர் க.பக்தன் இணை அமைப்பாளர் எஸ். ராஜேஷ், மாநில பொதுச் செயலாளர் ந. முருகானந்தம், சி.பரமேஸ்வரன், டாக்டர் த. அரசுராஜா, மாநில துணை தலைவர் ஜி. கார்த்திகேயன், மாநில பொருளாளர் நா. சண்முக சுந்தரம், மாநில செயலாளர்கள் சி.எம். அண்ணாதுரை, ஜே.எஸ். கிஷோர்குமார், தாமு, எஸ். முத்துக்குமார், சனில்குமார் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஹிந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர், சி.பரமேஸ்வரன் அவர்களின் தாயார், முத்துலட்சுமி, கோவை குனியமுத்தூர் நகர செயலாளர் கோகுல் அவர்களும் சமீபத்தில் இறைவனடி சேர்ந்தார்கள். இவர்களின் ஆன்மா நற்கதி அடைய இரங்கல் பிரார்த்தனை மேற்கொண்டது.
பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
* பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் எஸ்.டி.பி.ஐ., பி.எஃப்.ஐ., அமைப்புகளை தடை செய்ய கோரிக்கை.
* விநாயகர் சதுர்த்தி விழாவில் காவல்துறையின் அத்துமீறலை கண்டிக்கிறோம்…
* சில ஊடகங்களில் பொறுப்பற்ற தன்மையும் தேச விரோத செயல்களும்
* முத்தலாக் முறைக்கு தடை விதித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு வரவேற்பு
* தமிழக அரசே நக்ஸல் பயங்கரவாதி இரோம் சர்மிளாவை கொடைக்கானலை விட்டு வெளியேற்று.
* நீட் தேர்வும் சந்தர்ப்பவாத அரசியலும்.
* நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அருண்சக்தி குமார் அவர்களின் ஹிந்து விரோத போக்கிற்கு கண்டனம்.
* பொன்மாணிக்கவேல் ஐ.ஜி. அவர்களுக்கு பாராட்டு.
* சீனப் பொருட்களை புறக்கணிப்போம்.
* கௌரி லங்கேஷ் கொலையும் பொய்யான குற்றச்சாட்டும்.