ஹிந்து முன்னணி நிறுவன தலைவர் ராம. கோபாலன் 91வது பிறந்தநாள் விழாவில் மக்கள் மனம் திறந்தபோது…

ஸ்வாமி விமூர்த்தானந்தா :

ஒருமுறை ராம. கோபாலன்ஜி ராமகிருஷ்ண மடத்திற்கு நீங்கள் ஹிந்து முன்னணி, நாங்கள் ஹிந்து பின்னணி” என்று நான் கூறினேன்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்:

தன்னை ஒரு முழு மனிதனாக மாற்றியதே ராம. கோபாலன் அவர்கள் தான். ஒரு வருடம் கோபால்ஜிக்கு உதவியாளனாக  இருந்தபோது எனக்கு நிறைய அனுபவங்களை கற்றுத் தந்துள்ளது.  ஹிந்து சமுதாயத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் அதை தட்டிக் கேட்க முன்னணியாக வந்து நிற்கும் அளவிற்கு ஹிந்து முன்னணி அமைப்பை தமிழகத்தில் வளர்த்துள்ளார் கோபால்ஜி.

குமுதம் ஜோதிட ஆசிரியர் ஏ.எம். ராஜகோபாலன்:

வித்யாரண்யருக்குப் பிறகு நமக்குக் கிடைத்த ஆசார்யார் ராம. கோபாலன்ஜி. அவரை தேச விரோதிகள் வெட்டியபோது ஒரு மில்லிமீட்டர் தான் இடைவெளி இருந்தது…  சிறு கீறல் பட்டிருந்தாலும் மூளை செயலிழுந்திருக்கும். சிறு அசம்பாவிதம் நடந்திருந்தாலும் வீரத்துறவி நமக்கு கிடைத்திருக்க மாட்டார்.

திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜா:

வீடு, சோந்தம், பணம், ஆசை அனைத்தையும் துறப்பது துறவு என கூறுவர். ஆனால், பாம்புக்கே பயப்படும் மனிதர்கள் இருக்கும் காலத்தில், தீவிரவாதிகளின் பாமு”க்கே (வெடிகுண்டுக்கு) பயப்படாமல் துணிச்சலுடன் செயல்படும் வீரத்தை தான் வீரத்துறவு எனக் கூறுவார்கள். பயத்தை துறந்து சமுதாய பணி செவதில் இவர் என்றுமே வீரத்துறவி தான்.

ஓவு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம்:

ராமர் காலத்துக்கு பிறகு எங்கும் ராம ராஜ்ஜியம் அமையவில்லை. ராம ராஜ்ஜியத்தை மீண்டும் கொண்டு வர ராம. கோபாலன் பெரும் முயற்சி செது வெற்றியும் பெற்றுள்ளார்.

எஸ்.சி கமிட்டி துணை தலைவர் முருகன்:

தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் தலித்துகளை ஏமாற்றி, ஆசைகாட்டி மதமாற்ற முயற்சித்தபோது அதை எதிர்த்து நின்று தடுத்து நிறுத்திய ஒரே தலைவர் ராம. கோபாலன்.

வி.ஐ.டி. பல்கலைக் கழக துணை வேந்தர் வி.ஐ.டி.செல்வம்:

நான் நமது ஹிந்து தர்மத்தை அறிவியலாக பார்க்கிறேன். ஹிந்து மதம் அறிவியல் என்றால் ராம. கோபாலன்ஜி அதன் விஞ்ஞானி. நமது கலாச்சாரத்தில் மட்டும் தான் இயற்கையை தெவமாக வணங்குகின்றோம்.

டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்:

ராம. கோபாலன் அவர்களின் தலையில் என்று காவி அமர்ந்ததோ, அன்றே தமிழக மக்களின் மனதில் காவி அமர்த்துவிட்டது.

 

***

வீரத்துறவி ராம. கோபாலன் 91வது பிறந்தநாள் விழா  சென்னை  காமராஜர் அரங்கத்தில் அக்டோபர் 12 அன்று கொண்டாடப்பட்டது. ஹிந்து அன்னையர் முன்னணியினர் 91 பேர்   படிகளில் நின்று வரவேற்பு கொடுத்த காட்சி அருமை. நுழைவு வாயிலில் கோபால்ஜி சங்க பிரச்சாரக்காக சமுதாயத்தில் செத மாற்றங்களை நினைவுகூர்கிற வகையில் புகைப்படத் தொகுப்பு வைக்கப்பட்டிருந்தது. அதிலும் பெரும்பாலானோர் குடும்பத்தோடு கலந்துகொண்டது ஹிந்து முன்னணிக்குக் கிடைத்த அங்கீகாரம். விழாவிற்கு ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் பக்தன் நிகழ்ச்சியை வழிநடத்தினார். நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். கலைமாமணி, வீரமணி ராஜுவின் பக்தி பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. கடம் வித்வான் பத்ம பூஷண் விநாயக் ராம் குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ராம. கோபாலனின் வாழ்வும் பணியும் பற்றி பலர் மனம் திறந்து பேசினார்கள். ஹிந்துவாகப்  பிறந்ததற்கு நாம் பெருமை பட வேண்டும். நமது சமயம், மற்ற சமயங்களை விட அனைத்து வகையிலும் சிறந்தது என்றார் தேச. மங்கையர்க்கரசி. குழந்தைகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி மனம் கவர்ந்தது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரத தலைவர் மோகன் பாகவத் அவர்களின் வாழ்த்துக் கடிதம் படிக்கப்பட்டது.

***

 

ராம. கோபாலன் ஏற்புரை

இந்த ராம. கோபாலன் மறைந்தாலும் ஆயிரம் ஹிந்து இளைஞர்கள் சமுதாயப் பணி செவார்கள். தனி மனித புகழ்ச்சி சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் நல்லது அல்ல. அது தனி மனிதனுக்கும் கேடு, சமுதாயத்துக்கும் கேடு. ஒரு நல்ல மனிதன் சமுதாயத்துக்கு சேவை செய வேண்டும். ஹிந்து மதத்தின் கோட்பாடு தர்மத்துக்கு சேவை செய வேண்டும் என்பதே. எனவே அதற்கு ஏற்றாற்போல் உழைக்க வேண்டும். ஒரு நபரை மையப்படுத்தி மட்டும் செயலாற்றக் கூடாது.

 

நிகழ்ச்சித் தொகுப்பு: சரத்குமார், ஹேமந்த் குமார்