ஹிந்து தர்மத்திற்காக தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்தவர்

ஹிந்து தர்மத்திற்காக தன்னுடைய வாழ்வை க் கொண்ட, ஹிந்து தர்மத்தை கடைப்பிடித்த அன்பர் அசோக் சிங்கல்.

அயோத்தியில் ராமருக்கு ஆலயம் அமையவேண்டும் என்பது அவர் கனவு. அதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்தார்.

– சுவாமி தயானந்த சரஸ்வதி

 

அசோக் சிங்கல் பன்முக மேதை. ஹிந்து தர்மத்தின் அறநெறிகளையும் ஆன்மிகத்தையும் உலகம் முழுவதும் பரப்பியபடி விஸ்வ ஹிந்து பரிஷத்தை ஒரு புதிய பரிணாமம் பெறச் செய்தவர் அவர்.

– உமாபாரதி,

ASHOKமத்திய நீர்வளத் துறை அமைச்சர், பாரத அரசு

 

உயர் கல்வியில் சிறந்து விளங்கி ஆர்.எஸ்.எஸ்ஸில் பிரச்சாரக் ஆன அவர் விஸ்வ ஹிந்து பரிஷத் பொறுப்பை ஏற்றதை அடுத்து, பரிஷத்தின் சேவைப்பணிகள் அமோகமாக வளர்ச்சி பெற்றன. சிந்தனையாளர்கள் ராம ஜென்ம பூமி இயக்கத்தை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிடுகிறார்களே, அந்த இயக்கத்திற்காக நாடு தழுவிய அளவில் எழுச்சி ஏற்பட அரும்பணி புரிந்தவர் அசோக் சிங்கல்.

– சுவாமி சத்யமித்ரானந்த கிரி, ஹரித்துவார்

 

எத்தனையோ ஆண்டுகளாக எனக்கு அசோக் சிங்கலை நன்றாகத் தெரியும். எப்போதுமே அவர் மனதில் திபெத்திய மக்களுக்காகத் தனி இடம் உண்டு. திபெத்தியர்களிடம் அவர் என்றும் நட்பு பாராட்டுபவர்.

– தலாய் லாமா

 

ஆண்டு 2020க்குள் பாரதத்தை ஹிந்து தேசமாக பரிணமிக்கச் செய்யும் அவரது கனவு விஸ்வ ஹிந்து பரிஷத் ஊழியர்கள் அனைவருக்கும் ஊக்கம் அளிக்கக்கூடியது. ஓய்வு ஒழிவு இல்லாமல் பரிஷத்திற்காக அவர் 40 ஆண்டுகாலம் பாடுபட்டதை எவரும் மறக்க முடியாது.

– ஜி. ராகவ ரெட்டி,

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச தலைவர்

 

அசோக் சிங்கல்ஜி, தான் ஏற்றெடுத்த பணியை செவ்வனே செய்தது மட்டுமல்லாமல், ‘உலகில் ஹிந்துக்கள் கௌரவத்துடன் வாழவேண்டும், பாரதத்தின் புகழ் கொடிகட்டிப் பறக்க வேண்டும்’ என்பதே அவரது ஆசையும் திட்டமுமாக இருந்தது. அசோக்ஜி முழுக்க முழுக்க இதயம், இதயம், இதயம் தான் என்று ஆர்.எஸ்.எஸ்ஸின் மூத்த பொறுப்பாளர் ஒருவர் சொல்ல கேட்டிருக்கிறேன். அதனால் தான் சமுதாயம் அவரை அன்பு மேலிட அரவணைத்தது.

– சம்பத் ராய்,

விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலர்.

 

 

ஹிந்து இளைஞர்களுக்கு

ஊக்கம் தரும் வாழ்க்கை

எனது சம அசோக் சிங்கல் ஜி, எல்லோரையும் ஒருங்கிணைக்கும் நல்ல தலைவராக, சிறந்த பேச்சாளராக, கர்மயோகியாக, சிறப்பாக எழுதக்கூடியவராக இருந்தார். அவரது வாழ்வு எத்தகைய சிறப்பு இருந்தது என்பதற்கு அடையாளமாக கந்த சஷ்டி திருநாளில், இறைவனடிசேர்ந்தார் என்பதே சான்றாக உள்ளது.

விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவராக பொறுப்பேற்று அவ்வியக்கத்தை உலகம் முழுதும் பரவச் செய்து அகில உலக அளவில் புகழ்பெற்றார். ஸ்ரீராமஜென்ம பூமி போராட்டக் களத்தில் மயிர்கூச்செரியும் சாகசம் புரிந்தார். அவரது வாழ்வும் செயலும் லட்சோபலட்சம் இளைஞர்களுக்கு எழுச்சி கொடுத்து அவர்களை ஹிந்து சமுதாயப் பணியில்   ஈடுபட வைக்கும் என்பது திண்ணம்.

– இராம கோபாலன், ஹிந்து முன்னணி