ஹிந்து கடவுளர் விக்ரக திருட்டுக்கு விழுகிறது முற்றுப்புள்ளி?

ஆஸ்திரேலியா சென்ற மோடியிடம் இந்தியாவில் தமிழகத்தில் இருந்து கடத்திவரப்பட்ட இரண்டு சிலைகளை அந்நாட்டு பிரதமர் டோனி அப்போர்ட் இந்தியப் பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தா.

காஷ்மீர் கோயில் ஒன்றில் இருந்து 90 களில் திருடிச் செல்லப்பட்டு ஜெர்மனியால் வாங்கி வைக்கப்பட்டிருந்த மகிஷாசுரமர்த்தினி சிலை ஒன்றை அந்நாட்டு அமைச்சர் அக்டோபர் 2015ல்  இந்தியா வந்திருந்தபோது நல்லெண்ண நடவடிக்கையாக மோடியிடம் ஒப்படைத்தார்.

idoalஅமெரிக்க அரசு 200ற்கும் மேற்பட்ட இந்திய சிலைகள் உட்பட இங்கிருந்து திருடிச் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த கலைப் பொருட்களை அங்கு விஜயம் செத பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தது.

அமெரிக்காவிடமிருந்து சிலைகளைப் பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி,  சிலருக்கு இவை பொருளாதார பண்டங்களாகத் தெரியலாம். ஆனால் எங்களுக்கு இவை எங்கள் நாட்டின் கலைப் படைப்புகள், பணத்தால் அளக்க முடியாதவை. எங்கள் நாட்டின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் வெளிப்படுத்துபவை” என்று கூறியது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் கடந்த மே மாதம் மேற்கு மாம்பலத்தில் 77 கோடி ரூபா மதிப்புள்ள 8 ஐம்பொன் சிலைகளை கடத்தி வெளிநாடுகளுக்கு விற்க முயன்ற தனலிங்கம், கருணாகரன் ஆகிய 2 பேர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரால் கைது செயப்பட்ட சம்பவம் நினைவு கூரத்தக்கது.  இந்த வழக்கில், திரைப்பட இயக்குனர் வி.சேகர், பெண் நிருபர் மாலதி உள்பட 6 பேர் கைது செயப்பட்டனர். மேலும் பாலவாக்கத்தைச் சேர்ந்த தமீம் பாஷா என்பவரையும்  போலீசார் கைது செதனர். ஆக, சிலை திருட்டுத் தொழிலில் சினிமாவைச் சேர்ந்த பெரும் புள்ளிகள் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. நாத்திக வாதத்தாலும், ஹிந்து விரோத மனப்பான்மையாலும் பாலிவுட் போலவே கோலிவுட்டும் இருப்பதால் இதில் கொள்கை ரீதியாக தேச விரோத நடவடிக்கையில் ஈடுபடும் பெரிய கும்பல் இன்று ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிகிறது.  பாரத அரசின் வழிகாட்டுதலின் படி தமிழ்நாடு அரசால் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஒன்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. தீனதயாளன், சுபாஷ் கபூர் போன்ற புள்ளிகள் பிடிபட்டார்கள்.

அற்புதமாக சிலை திருட்டை கண்டுபிடித்த சிலை திருட்டுப் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேலும் அவரது குழுவினரும் பாராட்டுக்குரியவர்கள் தமிழக அரசும் தான்.