ஹிந்து இளைஞரை தாக்கிய முஸ்லிம் நபர்கள்

ஹைதராபாத்தில் உள்ள யாகுத்புராவில் கடந்த மே 11ம் தேதி, எல்.பி நகர் பகுதியைச் சேர்ந்த 19 வயதான எஸ் கார்த்திக் என்ற ஹிந்து இளைஞர், எஸ்.ஆர்.டி பழைய நகரில் வசிக்கும் தனது முஸ்லிம் காதலியைச் சந்திப்பதற்காக யாகுத்புராவில் உள்ள எஸ்.ஆர்.டி காலனிக்கு சென்றார். அங்கு இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, இக்ராம், முகமது, நயீம், சோஹைல் மேலும் பெயர் தெரியாத இருவர் அந்த இடத்திற்கு வந்தனர். இருவரும் பேசுவதை பார்த்ததும் அதனை எதிர்த்தனர். கார்த்திக்கை கத்திகள், இரும்பு கம்பிகள் மற்றும் தடிகளால் கடுமையாகத் தாக்கி துன்புறுத்தினர். இதனால் அவரது உடலில் பலத்த காயங்களை ஏற்பட்டது. பின்னர் அவர்கள், கார்த்திக்கின் தந்தை நரசிம்ம கவுடை தொலைபேசியில் தொடர்புகொண்டு ரூ. 50,000 பணம் கேட்டு மிரட்டினர். கார்த்திக்கை அந்த இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு கடத்திச் செல்ல முயன்றனர். ஆனால் அவர் தப்பித்து வீடு திரும்பினார். இதையடுத்து, அவர் ரெயின் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேர் மீதும் சம்பவம் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் இது தொடர்பாக தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் ரெய்ன் பஜார் காவல் நிலைய ஆய்வாளர் ஏ. மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.