சமூகத்தில் எதிர்மறையான விமர்சனங்கள் இருப்பதுதான் நல்லது. எதிர்க்கருத்துகள் இல்லாத சமுதாயம், எதிர்க்கட்சி இல்லாத அரசியல் மாதிரி சர்வாதிகாரத்துக்கு வழி வகுத்துவிடும். அதனால்தான் விமர்சனங்களை நாம் ஏற்றுக் கொள்வதும், கை குலுக்கிக் கொள்வதும் புன்னகை பூப்பதும் டில்லி அரசியலில் காணப்படும் மிக ஆரோக்கியமான விஷயம். இப்படியொரு நாகரிகமான போக்கை தமிழகத்தில் வளர்த்தெடுக்க பாரதீய ஜனதா கட்சி எவ்வளவோ முயற்சி செய்கிறது. தமிழக கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் முன் வருவதில்லை.
காரணம் இருக்கிறது. இங்கு திட்டமிட்டே பாரதீய ஜனதாவுக்கு எதிராக, ஹிந்து இயக்கங்களுக்கு எதிராக விஷமப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஹிந்து கலாச்சாரத்தை எதிர்ப்பதும்,பண்டிகைகளின் போது சமூக காவலர்கள் என்றும் சூழலியலாளர்கள் என்றும் சமூக செயற்பாட்டாளர் என்றும் புதிய புதிய அவதாரங்கள் எடுத்து ஹிந்துக்களுக்கு எதிராக குரல் கொடுப்பதும் திட்டமிட்டு செய்யப்படுகின்றன.
இதுபோன்ற சதி திட்டங்களை முறையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்பதை விட முளைக்காமலே செய்துவிடுவதில் தான் நம் புத்திசாலித்தனம் இருக்கிறது.
ஹிந்து எதிர்ப்பு பிரச்சாரங்கள் உருவாகிற இடங்களும் சூழலும் ஆச்சரியமானவை. எதிர்பார்க்க முடியாதவை. இங்கு தான் நாம் ஏமாந்து போய் விடுகிறோம்.
கொசு ஒழிப்புத் திட்டத்திற்காக சில சமூக ஆர்வலர்கள் சேர்ந்து ஒரு அமைப்பு அல்லது மன்றம் தொடங்குகிறார்கள் என்றால், அந்த அமைப்பில் இரண்டு முஸ்லிம்கள் தன்னார்வமாக வந்து கலந்து கொள்கிறார்கள். அது போலவே இரண்டு அல்லது மூன்று கிறிஸ்தவர்களும், தாங்கள் கிறிஸ்தவர்கள் என்ற அடையாளத்தைக் காட்டிக்கொண்டு சேர்ந்து விடுகிறார்கள். நூறு பேர் கொண்ட அமைப்பில் மீதி தொண்ணூற்றாறு பேரும் ஹிந்துக்கள் தான்.
எண்ணிக்கையின் அடிப்படையில் ஹிந்துக்கள் தான் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். ஆனால் சின்ன வித்தியாசம் இருக்கிறது. அமைப்பில் சேர்ந்திருக்கின்ற இரண்டு முஸ்லிம்களும் முஸ்லிம் இயக்கவாதிகள். அதுபோலத்தான் கிறிஸ்தவர் இயக்கவாதிகள்.
ஆனால் ஹிந்துக்கள் இயக்கவாதிகள் அல்ல. தங்களை எம்மதமும் சம்மதம் என்று கூறிக்கொள்கிற நடுநிலைவாதிகள்.
இங்கு தான் ஆபத்து தொடங்குகிறது. விஷ விதை விதைக்கப்படுகிறது.இந்த கொசு ஒழிப்பு கூட்டத்தில் சம்பந்தமே இல்லாமல் மத்திய அரசு பற்றி பேச்சு வரும், நீட் தேர்வு பற்றி பேசுவார்கள், இவை சமூக நீதிக்கு எதிர் என்பார்கள். தீபாவளிக்கு எதிராக பேசுவார்கள். ஹிந்து நடுநிலைவாதிகள் அமைதியாக இருந்துவிட்டு கை தட்டி விட்டு வந்து விடுகிறார்கள்.
எங்கேயே ஒரு மூலையில் களத்து மேட்டில் நடந்த கொசு ஒழிப்பு கூட்டம் ‘மோடி’ எதிர்ப்பு கூட்டமாகவும் தேச விரோத அமைப்பாகவும் மாறிவிடுகிறது.
ஆனால் இந்த இயக்கத்தில் யாரும் முஸ்லிம்களை எதிர்த்து பேசவிட மாட்டார்கள். இரண்டு முஸ்லிம் பார்வையாளர்கள் இருக்கிறார்கள் அல்லவா? பேச மாட்டார்கள். அது போலவே கிறிஸ்தவர்களை எதிர்த்தும் பேசமாட்டார்கள்.
ஈராக்கில் நடத்தப்படும் குண்டுவெடிப்புகள் பற்றியும் பாகிஸ்தான் படுகொலை பற்றியும் பேச மாட்டார்கள். ஏனென்றால் தங்களை மதச்சார்பற்றவர்களாக காட்டிக்கொள்ள விரும்புகிறார்கள் மீதி 96 ஹிந்துக்களும் மனதுக்குள் பேசவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் ஏதோ ஒன்று அவர்களைத் தடுக்கிறது.
என்ன செய்யலாம்? 96 ஹிந்துக்களை நம்பி பயனில்லை. 96 ஹிந்துக்களுக்கும் வலிமை சேர்க்கும் வகையில், பூனைக்கு மணிகட்டும் வேலையில் ஹிந்து இயக்கத்திலிருந்து உரிய அடையாளத்துடன் காவி கட்டிக்கொண்டு இரண்டு பேர் அந்த கொசு ஒழிப்பு கூட்டத்தில் ஆஜர் ஆகி விட வேண்டும்.
கொசு ஒழிப்புக்கு நாங்கள் தயார். இந்தக் கூட்டத்தில் கொசு ஒழிப்பை தவிர வேறு ஏதும் பேசக்கூடாது என்ற தொனியில் ஹிந்து இயக்கத்தினர் தங்கள் வாதங்களை முன்வைக்க வேண்டும். அது கூட தேவைப்படாது. ஹிந்து இயக்க ஆதரவாளர்கள் இரண்டு பேர் இருக்கிறார்கள் என்று தெரிந்தால் போதும், மதத்தைப் பற்றியோ, மத்திய அரசு பற்றியோ வாய் திறக்கமாட்டார்கள். நாமும் இயக்கத்திற்கு வாழ்த்து சொல்லிவிட்டு வந்து விடலாம்.
ஒரே ஒரு உதாரணம், சமீபத்தில் திருநெல்வேலியில் கந்து வட்டி கொடுமைக்கு எதிரான கூட்டியக்கம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்கள். நோக்கம் நல்ல நோக்கம் தான் வரவேற்கிறோம். இயக்கத்தில் இருப்பவர்கள் பெரும்பான்மையானவர்கள் ஹிந்துக்கள் தான். ஆனால் ஹிந்து இயக்கவாதிகள் யாரும் இல்லை. இந்த ‘கந்து வட்டிக்கு’ எதிரான கூட்டியக்கத்தை வழிநடத்துபவர் ஒரு கிறிஸ்தவர். இங்கு தான் ஆபத்து தொடங்குகிறது. இங்கு பணமதிப்பிழப்பும் ஜி.எஸ்.டி.யும் பேசப்படும். மோடி எதிர்ப்பு எண்ணம் உருவாக்கப்படும். அது ஹிந்து மத எதிர்ப்பாக மாறும். இது நடக்கக் கூடாது.
இந்த கந்து வட்டி கொடுமைக்கு எதிரான கூட்டு இயக்கத்தில் மடாதிபதிகள் ஆர்.எஸ்.எஸ். இயக்கம், ஹிந்து முன்னணி என்று ஹிந்து இயக்கத்திலிருந்து கண்டிப்பாக சிலர் பங்கேற்க வேண்டும். அந்த கூட்டியக்கம் கந்து வட்டியை மட்டுமே எதிர்த்துப் பேச வேண்டுமே தவிர, ஜி.எஸ்.டி. பற்றி யாரும் வாய் திறக்கக்கூடாது. ஒரு சமூக நோக்கத்திற்காக ஒரு அமைப்பு தொடங்கும் போது அங்கு அரசியல் ஏன் என்ற கேள்வி வைக்கப்பட வேண்டும். நம்மவர்கள் இரண்டு மூன்று பேர் இருந்தாலே போதும், கந்து வட்டிக்கு எதிரான கூட்டம் அதை மட்டும் பேசி கலைந்துவிடும்.
இல்லையென்றால் தேவையே இல்லாமல் இந்த கந்து வட்டிக்கு எதிரான கூட்டம் ரோட்டில் நின்று கொண்டு மத்திய அரசின் மீது (மோடி மீது) கல்லெறியும்.
இது மட்டுமல்ல, யார் என்ன அமைப்பு ஆரம்பித்தாலும் சரி, அதில் ஹிந்து இயக்கவாதிகள் உரிய அடையாளங்களுடன் கலந்து கொள்ள வேண்டும். தனுஷ் ரசிகர் மன்றம், ஹன்சிகா நற்பணி மன்றம், ஏகாம்பரம் எழுத்தாளர் சங்கம், குப்புசாமி கூட்டு இயக்கம், நுகர்வோர் மன்றம், குடியிருப்போர் சங்கம், நடை பயில்வோர் சங்கம், கடலை விற்போர் சங்கம், இலை எடுப்போர் சங்கம், பயிற்சி மையங்கள், ஆலோசனைக் கூட்டங்கள் என்ற எந்த அமைப்பு தொடங்கப்பட்டாலும் நம் இயக்கவாதிகள் நெற்றியில் விபூதி, குங்குமம் பூசிக்கொண்டு காவியுடன் கலந்து கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் மட்டுமே சம்பந்தமே இல்லாமல் எழும் எதிர்ப்புக் குரல்களை ஒடுக்க முடியும். எதிர்க் கருத்துகள் எவ்வளவு வேண்டுமானாலும் உருவாகட்டும். எதிரிகள் உருவாகவே கூடாது. டூ