கேரளாவில் ஹலால் எதிர்ப்பு இயக்கம் தீவிரமாக உருவாகி வருகிறது. ஹிந்து, கிறிஸ்தவ அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த பாரபட்சமான ஹலால் முறைக்கு எதிராக போராட முன்வந்துள்ளன. இது சம்பந்தமாக நடைபெற்ற கேரள ‘சுதேசி ஜாக்ரன் மன்ச்’ கூட்டத்தில், ஹலால் சான்றிதழ் பெறுவது என்பது, தீண்டாமையின் மற்றொரு வடிவம். எனவே அதை பாரதத்தில் முற்றிலுமாக தடைசெய்ய சட்டம் கொண்டு வரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முஸ்லிம் நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கேற்ப உருவானதுதான் ஹலால் நடைமுறை. ஆனால் பாரதத்தில் இதை கேட்பது ஒரு மாற்று வணிக முறைக்கு வழிவகுக்கிறது. இது அரசியலமைப்பிற்கு எதிரானது’ என தெரிவித்துள்ளது.