அயோத்தி ஸ்ரீ ராமஜன்மபூமி சம்பந்தமான உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து அங்கு பிரம்மாண்டமான ஸ்ரீ ராமனின் கோயிலை கட்ட ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பூர்வாங்க பணிகளை துவக்கியுள்ளது. இதற்கு நிதி திரட்ட நான்கு லட்சம் கிராமங்களில், சுமார் 11 கோடி குடும்பங்களை தொடர்புகொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கோயில் கட்டும் பணியில் பக்தர்களின் பங்களிப்பு குறித்து விளக்கப்படும். வெளிப்படை தன்மையை உறுதிசெய்யும் விதத்தில், பக்தர்களிடம் இருந்து ரூ.10, 100, 1000 மதிப்பிலான கூப்பன்கள், ரசீது புத்தகங்கள் மூலம் நிதி திரட்டப்படும். இந்த முயற்சி 15 ஜனவரி முதல் 27 பிப்ரவரி 2021 வரை நடைபெறும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.