ஸ்ரீனிவாசன் ஜி ( 100 ஜி ) மறைவுக்கு கோபால் ஜியின் சிரத்தாஞ்சலி.

அன்று திருவல்லிகேணியில் சீனிவாசன் பலர் இருந்தார்கள். இவரை அடையலாம் காண அவரது வீட்டு இலக்கம் 100 என்பாதால் -100 சீனிவாசன் என்று அழைப்போம். அதுவே ஹண்ட்ரட் ஜி ஆகி நிலைத்து நின்றது.

எந்த காரியத்தை எடுத்தாலும் அதன் அடியாழதுக்கு சென்று படிப்பது அவருடைய பழக்கம். அவர் கதை சொல்லத் துவங்கினால் கேட்பவர்கள் மெய் மறந்து போவார்கள். அந்த நிகழ்ச்சி நமது கண் முன்னேயே நடப்பதாக தோன்றும்.

அவர் அபாரமான ஆசிரியர், மாணவர்களிடம் அவருக்குள்ள அக்கைறையை சொற்களால் வர்ணிக்க இயலாது. எதை சொல்லிக் கொடுத்தாலும் அதை அவர் ஆழமாக படித்த பிறகே கற்பிப்பார். சிறுவர்களுக்கு பூகோளம் கற்பிப்பது அவருக்கு பிடித்த விஷயம். அதற்காக பிரிட்டிஸ் கவுன்சில் மற்றும் யு.எஸ்.ஐ.எஸ் அமெரிக்க நூல் நிலையங்களில் உள்ள புத்தகங்களை தேடிப்பிடித்துப் படிப்பார். கற்பிப்பது அவருக்கு தெய்வீக பணி.

ரா.சீனிவாசன் என்றால் அன்பு என்று கூறிவிடலாம். ஒவ்வொருவரிடமும் அவர் காட்டிய அன்புக்கு அளவே இல்லை. அன்பின் பரிணாமங்களை அவர் வாழ்ந்து காட்டினர்.

ஒவ்வொரு சாதாரண ஸ்வயம்சேவகருடன் அவர் மணிகணக்கில் பேசுவார். மனம் விட்டு பேசுவார். பேச வைப்பார். அதன் காரணமாக அந்த ஸ்வயம் சேவகருக்கு சங்கத்தின் மீது பற்று ஆழமாகும்.

கடந்த சில ஆண்டுகளில் அவர் லட்ச கணக்கில் ஜபம் செய்தார். ஆனால் அவரது ஆன்மிக நாட்டம் தேசப்பணியை பாதிக்கவில்லை என்பது மட்டும் இல்லாமல் வலுவையும் சேர்த்தது.

கடைசி காலங்களில் புற்றுநோயால் பாதிக்கபட்டபோது அவர் துடித்தபோதும் சங்க நினைவு தான், தெய்வீக நினைவு தான்.

எவரும் எந்த உதவியையும் செய்வதை அவர் ஏற்றுகொள்ள மாட்டார். இதனால் அவருக்கு தொண்டு செய்யும் பணி சிலருக்கே கிட்டியது.

முன்னுதாரணமான ஒரு ஸ்வயம் சேவகர், தவ வடிவான மனிதர். ஸ்ரீ மந் நாராயணன் திருவடிகளில் இணைந்தார். அவரது தொண்டு தியாகம் அன்பு கர்மயோக வாழ்வு நமக்கு வழி காட்டுமாக.

ராம.கோபாலன்

ஸ்ரீனிவாசன் ஜி நினைவு தினம் இன்று

(விஜயபாரதம் இதழ் ஜனவரி 21 1994)