ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்புகளை ஆதரிக்கும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலை ஜூலை 4 அன்று வெளியிடப்படுகிறது. இதனை, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் டெல்லியில் நடைபெறும் ஒரு பாராட்டு விழாவில் வெளியிடுகிறார். தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை (டி.பி.ஐ.ஐ.டி), மாநிலங்களின் ஸ்டார்ட் அப் தரவரிசை பயிற்சியின் மூன்றாவது பதிப்பை, போட்டி மற்றும் கூட்டுறவு கூட்டாட்சியை மேம்படுத்துவதற்கான முக்கிய நோக்கத்துடன் நடத்துகிறது. ஸ்டார்ட் அப்களின் வளர்ச்சிக்கான விதிமுறைகளை தளர்த்துவதற்கும், ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழலுக்கான ஆதரவை வலுப்படுத்துவதற்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஊக்குவிப்பதற்காக இந்த பயிற்சி 2018ல் தொடங்கப்பட்டது. பாரதத்தை உலகளவில் முன்னணி ஸ்டார்ட் அப் நாடுகளில் ஒன்றாக மாற்றுவதற்கு, நாட்டில் உள்ள 2ம் அடுக்கு மற்றும் 3ம் அடுக்கு நகரங்களில் தொழில் முனைவோர் வளர்ச்சி அவசியமாகிறது. இந்த ஆண்டு மொத்தம் 24 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்கள் இப்பயிற்சியில் பங்கேற்றன. ,உலகளாவிய கொரோனா பாதிப்பு, பொருளாதார பிரச்சனைகளுக்கு மத்தியில் ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் அமைப்புக்கு அரசுகள் வழங்கும் விரிவான ஆதரவை எடுத்துக்காட்டுவதால், இந்தப் பதிப்பு தனித்துவமானது என்றால் மிகையல்ல.