‘வேல் யாத்திரை’ துவங்கப்படும் என தமிழக பாஜக சொன்னபோதே கழகங்களுக்கும் அதன் அடிப்பொடிகளுக்கும் பதற்றம் தொற்றிக் கொண்டதை நன்றாகவே உணர முடிந்தது.
வேல் யாத்திரை சமூக அமைதியை சீர்குலைக்கும் என கூறி தடுக்க முயன்றனர். அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரும் வேல் யாத்திரையை கைவிடுவதே நல்லது என அறிக்கை விட்டார்.
கந்த சஷ்டி கவசத்தை அவமதித்த கருப்பர் கூட்ட ஆதரவாளர்களான இவர்கள் அதனால் ஏற்பட்ட ஹிந்து எழுச்சி எனும் பக்கவிளைவை நன்றாகவே உணர்ந்து இருந்தார்.
ஆண்டாள் அவமதிப்பு, ஹிந்து விரோத அவமதிப்புகளால் ஹிந்து விரோதிகள் என்று தங்கள் மீது விழுந்த முத்திரையை களைய முயன்ற ஸ்டாலின், தேவர் குருபூஜை விழாவுக்கு சென்றார். அங்கும் திருநீறை தரையில் கொட்டி சர்ச்சைக்குள்ளானார்.
மனுநீதி உள்ளிட்ட விவகாரங்களில் அவரது கூட்டணியினர் அவருக்கு மேலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தினர். இந்த நிலையில் வேல் யாத்திரை எங்கே தங்கள் ஓட்டு வங்கியில் ஓட்டை போட்டுவிடுமோ என பயந்த கழக கூட்டங்கள் அதை தடுக்க வேறு வழி இல்லாததால், கொரோனாவை காரணம் காட்டி நீதிமன்றப் படியேறினர்.
ஆனால், இதற்கு முன் இவர்கள் நடத்திய கட்சி கூட்டங்கள், பேருந்து, டாஸ்மாக், முதல்வர் கலந்துகொண்ட கூட்டங்கள் உட்பட பல இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என்பதை மறந்து விட்டனர். இவர்களுக்கு இந்த வேல் யாத்திரை, அத்வானி நடத்திய ரதயாத்திரயாகவே தெரிந்திருக்கிறது போலும்.
வேல் யாத்திரை தடை செய்யப்பட்டாலும்
அது வெற்றி யாத்திரையே என்பதில் ஐயம் இல்லை.