கடந்த மார்ச் 25 முதல் இந்தியாவில் முழு ஊரடங்கு காரணமாக ரயில், விமான சேவைகள் அடியோடு பாதிக்கப்பட்டன. இதனால் வெளிமாநிலங்கள் போல், வெளிநாடுகளிலும் பலரும் அவரவர் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகள் சிறிது இயல்பு வாழ்வு மாற துவங்கி உள்ளது. வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானங்கள் அறிவிக்கப்பட்டன.
இதன்படி பிரிட்டன், மலேசியா, நியூயார்க்கில் இருந்து பலர் முதல் பல்வேறு நாடுகளில் இருந்து பலரும் இந்தியா திரும்பி வருகின்றனர். லண்டனில் இருந்து 326 பேர் கர்நாடக மாநிலம் ஏர் இந்திய சிறப்பு விமானத்தில் பெங்களூரு வந்து சேர்ந்தனர். இன்று அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் இருந்து 112 பேர் ஐ தராபாத் விமான நிலையம் வந்து அடைந்தனர்.