வீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது

மகாராஷ்டிரா பாஜக தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தல் சுதந்திரப் போராட்ட தியாகி வீர சாவர்க்கர்,  சமூக நீதிப் போராளி மகாத்மா ஜோதிபா பூலே, இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்ரிபாய் பூலே ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கான பாஜகவின் அறிக்கையில்  மகாராஷ்டிரா முதல்வர், ஜேபி நட்டா விருது வழங்க வலியுறுத்துவோம் என்றனர்  .

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: 1 கோடி வேலைவாய்ப்புகள் வரும் 5 ஆண்டுகளில் 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும். பெண்கள் சிறுசேமிப்பு குழுக்களுடன் 1 கோடி குடும்பங்களை இணைப்பதன் மூலம் சிறப்பு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ரூ. 5 லட்சம் கோடி முதலீடு 2022-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகிக்கப்படும். இதற்காக மத்திய அரசுடன் இணைந்து ரூ. 5 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும். மாநிலத்தின் அனைத்து சாலைகளையும் சீரமைத்து நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். வறட்சியில் இருந்து மீட்போம் வரும் 5 ஆண்டுகளில் மகாராஷ்டிராவை வறட்சியின் பிடியில் இருந்து முழுமையாக மீட்போம். கோதாவரியில் இருந்து வறட்சி பாதித்த வடக்கு மராத்வாடா பகுதிக்கு ஆற்று நீரை திருப்பிவிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது உள்ளிட்ட 16 பிரச்சனைகள் பட்டியலிடப்பட்டு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன..