திருப்பூர் வரும் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக, ‘வி லவ் பி.எம்., மோடி’ என்ற ஆங்கில வாசக எழுத்துவடிவில் பள்ளி மாணவர்கள் அமர்ந்து அசத்தினர்.
வரும் 27ம் தேதி, பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த மாதப்பூரில் நடைபெறும் பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். பிரதமரை வரவேற்கும் விதமாக, செட்டிபாளையம், விவேகானந்தா பள்ளியில் 650 மாணவர்கள், ‘வி லவ் பி.எம்., மோடி’ என்ற ஆங்கில வாசகத்தி எழுத்து வடிவில் பள்ளி வளாகத்தில் அணிவகுத்து தங்கள் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். பா.ஜ., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.