ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியை முன்னிட்டு, விவே கானந்தர் ரத யாத்திரை, நேற்று துவங்கியது.
வேளச்சேரி, குருநானக் கல்லுாரியில், 11வது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி, 29ம் தேதி துவங்குகிறது.வரும், 28ம் தேதி நடக்கும் துவக்க விழாவில், மாதா அமிர்தானந்தமயி பங்கேற்று, கண்காட்சியை துவக்கி வைத்து, அருளாசி வழங்குகிறார்.இந்த ஆண்டு, ‘பெண்மையை போற்றுதல்’ எனும் கருத்தை அடிப்படையாக வைத்து, கண்காட்சி நடத்தப்படுகிறது.
இக்கண்காட்சி குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல முன்னோட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.அதன் ஒரு பகுதியாக, விவேகானந்தர் ரத யாத்திரை நேற்று துவங்கியது.இதில், விவேகானந்தர் மற்றும் கண்ணகியின் திருவுருவச் சிலைகள் இடம் பெற்ற, 25 ரதங்கள், நேற்று முதல், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வலம் வரத் துவங்கின.
இந்த ரதங்கள், 30ம் தேதி வரை, 1,500 பள்ளிகளுக்கு செல்ல உள்ளன. ரத யாத்திரை துவக்க நாளான நேற்று, சென்னை, சேத்துப்பட்டு மகரிஷி பள்ளிக்கு ரதம் வருகை தந்தது.பள்ளி முதல்வர் ஹரிபாபு தலைமையில், ஏராள மான மாணவ – மாணவியர் மலர் துாவி, பக்தி பாடல்களை பாடி, ரதத்திற்கு வரவேற்பு அளித்தனர்.