திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் ரமண மகரிஷியைப் பார்க்க ஒரு இளைஞன் வந்திருந்தான். அப்போது மண்டபத்தில் பகவான் தியான நிலையில் உட்கார்ந்து இருந்தார். பக்தர்கள் பலர் அவருக்கு முன்பு அமர்ந்து அவரை தரிசித்தபடி இருந்தனர். அந்த இளைஞன் தன்னை ஒரு மேதாவியாக நினைத்துக்கொண்டு உரத்த குரலில் மகரிஷியிடம் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் சுவாமி விவேகானந்தருக்கு தெய்வத்தை காட்டியதுபோல உங்களால் எனக்கு காட்ட முடியுமா?” என்று கேட்டான்.
நிச்சயம் இந்த கேள்விக்கு பகவான் தடுமாறிப் போவார் என்று நினைத்தான். அங்கு இருந்த பக்தர்கள் ரமண மகரிஷி என்ன சொல்லப் போகிறார் என்று பதற்றத்துடன் காணப்பட்டனர்.
பகவான் கடவுளை காண்பிக்க வேண்டுமா? தாராளமாக காண்பிக்கலாம். அது சரி அதுபோன்று கேள்வி கேட்பதற்கு நீ என்ன விவேகானந்தரா?” என்றார்.
அவ்வளவுதான் அவனது முகத்தில் அறைந்தது போல் உணர்ந்தான். பகவானை அவமானப்படுத்த நினைத்த அவன் அவமானம் அடைந்து தலைகுனிந்தான்.
ஆம்… யாரும் யாரையும் விமர்சிக்கலாம். கேள்வி கேட்கலாம். ஆனால் அதற்கு ஒரு தகுதி வேண்டும். விவேகானந்தர் அப்படி ஒரு கேள்வி கேட்டால் அதற்கான தகுதியும் தேடலும் அவரிடம் இருந்தது. இன்றைக்கு சிலர் இப்படித்தான் தங்களை மேதாவிகள் என்று நினைத்துக் கொண்டு முட்டாள்தனமாக கேள்விகளைக் கேட்டு விடுகின்றனர்.
எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில் அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்