விவசாய மசோதா எதிர்ப்பு என காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட், திரிணாமுல் என பல கட்சியினரும் தேசம் முழுவதும் சிறிய அளவில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டத்திற்கு மக்களின் ஆதரவு இல்லை என்பதால், தங்கள் கட்சியினரை விவசாயிகளாக நடிக்க வைத்து போராடுகின்றனர்.
அப்பாவி விவசாயிகளிடம் பொய் செய்திகளை பரப்பி மூளை சலவை செய்கின்றனர். இதெல்லாம் தற்போது வெளிச்சத்துக்கு வருகின்றன. இது குறித்து பிரதமர் மோடியும், ‘இது விவசாயிகளை அவமதிக்கும் செயல்’ என தன் வருத்தத்தை பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா நிறைவேறியபோது வெளிநடப்பு செய்து விட்டு, பின் தங்கள் ஆதரவாளர்களை தூண்டி போராட்டம், கலவரம் செய்வது இவர்களின் வாடிக்கை. உதாரணமாக காங்கிரஸார் டெல்லியில் பயன்படுத்த முடியாத ஒரு பழைய டிராக்டரை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் இந்த டிராக்டர் ஏற்கனவே இவர்களால் ஹரியானாவில் எரிக்கப்பட்டதுதான். இதுதான் இவர்களின் மட்டமான நாடக அரசியல். இதே போல, மற்ற போராட்டகாரர்களின் விவரங்களையும் விசாரித்தால் மேலும் பல உண்மைகள் வெளிவரும்.
சில அப்பாவி விவசாயிகளும் உண்மையை அறியாமல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம். அவர்களிடம் உண்மையை விளக்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உண்டு.
பயங்கரவாத ஆதரவு பி.எப்.ஐ’யின் அரசியல் முகமான எஸ்.டி.பி.ஐ கட்சி, நக்ஸல் அமைப்புகள் என சிலரும் விவசாயிகள் எனும் போர்வையில் போராட்டம் செய்கின்றனர். இது தேசத்தில் கலவரத்தை தூண்டிவிடும் ஒரு விபரீத முயற்சி.
இது உடனடியாக தடுக்கப்பட வேண்டும். இவர்கள் போராடுவது விவசாயிகளுக்காக அல்ல, தங்கள் வருமானம், பிழைப்பு போய்விடும் என்பதால் மட்டுமே. இதை விவசாயிகள் உணர வேண்டும்.