கல்கத்தாவில் கிங்ஸ்போர்டு எனும் ஆங்கிலேய நீதிபதி நமது சுதந்திரத்தில் போராட்ட வீரர்களுக்கு காட்டுமிராண்டித்தனமான தண்டனைகளை வழங்கி வந்தார்.
ஒரு 14 வயது சிறுவன் வந்தேமாதரம் சொன்னதற்காக அவனுக்கு கசையடி தண்டனை கொடுக்க உத்தரவிட்டார். பாவம் அந்த சின்னஞ்சிறுவன் மயங்கி விழும் வரை கசையடி விழுந்தது. இதனால் கொதித்துப்போன ஒரு புரட்சி வீரன் அந்த நீதிபதியை பழிக்குப்பழி வாங்க முடிவெடுத்தான். அவன் பெயர் குதிராம் போஸ். ஜவஹர்லால் நேரு பிறந்த அதே ஆண்டில் தான் அவனும் பிறந்தான்.
ஒருநாள் மாலையில் நீதிபதியின் வருகையை எதிர்பார்த்து அவரது வீட்டின் வெளியே மறைந்து நின்றான். குதிரை பூட்டிய ஒரு சாரட் வந்து நின்றது. நீதிபதிதான் அந்த வண்டியில் வருகிறார் என நினைத்து வெடிகுண்டுகளை எறிந்தான். ஆனால் அந்த வண்டியில் நீதிபதியின் நண்பருடைய மனைவி திருமதி கென்னடி என்பவர் வந்தார். அவர் வெடிகுண்டு தாக்குதலால் மரணமடைந்தார். இரண்டாவது வண்டியில் வந்த நீதிபதி தப்பினார். தப்பி ஓடிய குதிராம்போஸ் கைதானான். வழக்கு விசாரணை நடைபெற்று அவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
1908 – ஆகஸ்டு 11 – ம்தேதி முஸாபர் சிறையில் குதிராம் போசுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது அவனுக்கு 19 வயதுதான்.
தூக்கிலிடுவதற்கு முன்தினம் இரவு தன் தாய்க்கு எழுதிய இறுதி கவிதை….
அழாதே அம்மா!
நான் மீண்டும் உன் வயிற்றிலேயே பிறப்பேன்.
பிறந்தது நான்தான் என்பதை அறிய
கழுத்தை தடவிப்பார்….
தூக்குக் கயிற்றின் தழும்புகள் இருக்கும்….
அழாதே அம்மா!”
எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில் அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்