விற்கப்படும் சீன முஸ்லிம்கள்

சீனா, உய்குர் முஸ்லிம்களை அடிமைகளாக பல பெரிய நிறுவனங்களுக்கு விற்கிறது. நைக், அடிடாஸ், ஆப்பிள் போன்ற பெரும் நிறுவனங்களுக்கு கூட இவர்கள் விற்கப்படுகின்றனர். இவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள். தவிர, விடுமுறை கிடையாது. வீட்டிற்கு போகக்கூடாது, மத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது போன்ற கடும் கட்டுப்பாடுகள் உண்டு. பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இவர்கள் விற்கப்படுகின்றனர். இதை போன்ற அப்பட்டமான மனித உரிமை மீறல் காரணமாகவே சீனாவால் குறைந்த விலையில் பொருட்களை உற்பத்தி செய்ய முடிகிறது. இதே காரணத்திற்காக சமீபத்தில் அமெரிக்கா சீனாவின் பருத்தி கொள்முதலை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.