விண்ணில் சுழன்றாலும் மண்ணில் மனம்!

தேசத்தில் எத்தனையோ முக்கிய பிரச்சினைகள் இருக்க ராக்கெட் விடுவது முக்கியமா? ஏழை நாடான இந்தியா ராக்கெட் செலுத்துவதிலும், நிலாவுக்கு விண்கலத்தை அனுப்புவதிலும் பெருமிதம் கொள்வது சரியா என்று பொறுப்பில்லாமல் கேட்பவர்களும் உண்டு.

நம் அன்றாட வாழ்வின் எந்த அம்சத்தில்தான் செயற்கைக்கோள்களின் பங்களிப்பு இல்லை?

விண்ணில் சுழன்றபடி தேசத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும்  கண்ணிமைக்காமல் துருவி நமக்குப் பாதுகாப்புக் கேடயமாக விளங்குகின்றன. செயற்கைக்கோள்கள்.

டிவி பார்க்கிறோம், செல்போனில் பேசுகிறோம். இந்த வசதிகள் எல்லாமே செயற்கைக்கோள் புண்ணியத்தில்தான் சாத்தியம். (தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்கள்). சூடான செதிகளை உடனுக்குடன் பார்க்க்கும் போதும், விளையாட்டுப் போட்டிகளை நேரடியாகப் பார்த்து ரசிக்கும் போதும் விண்ணில் சுழலும் அந்த விந்தை விண்கலங்களை நினைத்துக் கொள்கிறோம்?

பயணம் செகிறோம். எந்த இடத்திலிருக்கிறோம் என்று காட்டும் ஜி.பி.எஸ். வசதி  இருக்கிறதே, அதுவும்  செயற்கைக்கோளால்தான்.

பருவ மழை வரும் போது  புயல் நகர்வதை  உரிய நேரத்தில் அறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உதவுவது எது? விண்ணில் இருந்து மண்ணைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கும் செயற்கைக்கோள்கள்தான்.

கடந்த ஆண்டு ஒடிசாவில் பைலின் புயல் தாக்கியபோது, உரிய நேரத்தில் லட்சக்கணக்கானோரைப் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றி உயிர் காக்க உதவியது செயற்கைக்கோள் புகைப்படங்கள்தான்.

பாரதத்தின் இஸ்ரோ அமைப்பு விண்ணில் நிலை நிறுத்தியுள்ள ரிமோட் சென்ஸிங் (தொலைஉணர்வு) செயற்கைக்கோள்கள் பூமியைக் கண்காணித்து அதன் பரப்பில் ஏற்பட்டுவரும் மாற்றங்களைப் புகைப்படங்கள், வரைபடம் வழியே அறிய உதவுகின்றன. ஆவுப் பணிகளில் இந்த விவரங்கள் பேருதவி.

எந்த இடத்தில் நிலத்தடி நீர் எந்த ஆழத்தில் உள்ளது எனஅறியவும், பாசன வசதி பற்றிய விவரங்களைப் பெறவும் இவை கைகொடுக்கின்றன. விவசாயிக்குத்தான் எவ்வளவு பெரிய உபகாரம் இது!  வறட்சிக்கான அறிகுறிகளை அறிந்து முன்கூட்டியே இவை சோல்லுகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

காடுகளின் பரப்பை அறியவும் அவற்றில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொள்ளவும். நிலத்தடிக் கனிம வளங்களை அறியவும் செயற்கைக்கோள் விவரங்கள் உதவுகின்றன.

ஆழ்கடல் பகுதியில்  மீன் எங்கே அதிகம் என்று மீனவர் தெரிந்து கொள்ளவும் இப்போது செயற்கைக்கோள் தான் கதி. ராணுவ நோக்கிலான கண்காணிப்பில் ஈடுபட்டு, தேசத்தின் பாதுகாப்பை உறுதி செயும் பணியையும் கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் மேற்கொண்டுவருகின்றன.

சுற்றுச்சூழல் பாதிப்பை உணர்ந்து நடவடிக்கை எடுக்கவும் தேவையான விவரங்களை அவை அளிக்கின்றன. செயற்கைக்கோள் எடுத்த படங்கள் ஒரு நகர்ப்புறத் திட்டமிடலைச் சிறப்பாக மேற்கொள்ள உதவுகின்றன. செயற்கைக்கோள் தகவல்கள் மூலம் மீன்பிடி தொழிலில் ரூ.24,000 கோடி, விவசாயத்தில் ரூ. 50,000 கோடி அளவுக்கு நன்மை கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கிறது ஆவு ஒன்று.

இவ்வளவெல்லாம் செயும் செயற்கைக்கோள் அனாவசிய செலவு என்று அலட்சியப்படுத்திப் பேசுவது புத்திசாலித்தனம் அல்ல..

விண்வெளி ஆவில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டிருக்காவிட்டால் இந்த விவரங்களுக்கு எல்லாம் அந்நிய நாடுகளின் செயற்கைக் கோள்களிடம் நாம் கையேந்த  வேண்டியிருந்திருக்கும்.