வாடாமொழி ஆக்கினார் வடமொழியை!

வாடாமொழி ஆக்கினார் வடமொழியை!

குடியரசு தினத்தன்று ‘பத்மஸ்ரீ’ விருது பெற்ற சமு. கிருஷ்ண சாஸ்திரியின் சாதனை என்ன? தேசத்தின் எல்லா பகுதிகளிலும், பல நாடுகளிலும் ஸம்ஸ்க்ருதத்தில் பேசக்கூடியவர்கள் இன்று 90 லட்சம் பேர் உருவாகியுள்ளனர். கடினமான இலக்கணப் பாதையில் அல்லாமல் சுலபமான உரையாடல் உத்தியில் பத்து நாளில் ஸம்ஸ்க்ருதம் கற்க இவர் 30 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய பயிற்சி முறைதான் இந்த வெற்றிக்கு சூட்சுமம்.

இன்று ‘ராஷ்ட்ரீய ஸம்ஸ்க்ருத சம்ஸ்தான்’ உள்ளிட்ட தேசிய கல்வி நிலையங்களின் ஆட்சி மன்ற உறுப்பினராக உள்ள கிருஷ்ண சாஸ்திரி, பெங்களூருவில் ஒரு வீட்டுத் திண்ணையில் பத்துப் பேருக்கு உரையாடல் மூலம் ஸம்ஸ்க்ருத அறிமுகம் செது வைத்து தொடங்கிய பணிதான் இன்று ‘ஸம்ஸ்க்ருத பாரதி’ என்ற தன்னார்வ அமைப்பாக நாடு நெடுகப் பரவியுள்ளது. அந்த அமைப்பின் அகில பாரதப் பொறுப்பாளர்களில் ஒருவராக செயல்படுகிறார்.

அமெரிக்கா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல தேசங்களில் ஸம்ஸ்க்ருத நாட்டம் அதிகரித்திருப்பதற்கு ஸம்ஸ்க்ருத பாரதியின் பணியே மூல விசை. உதாரணமாக அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளியினர் ‘அந்நிய மொழி’ என்ற வகையில் ஸம்ஸ்க்ருதத்தையே தங்கள் பிள்ளைகளுக்குத் தேர்வு செகிறார்கள்.

ஸம்ஸ்க்ருதம் என்றால் சர்ச்சை கிளப்புகிறவர்கள் இடதுசாரிகளும் இடது பாவனையாளர்களும் தான் என்கிறார் சாஸ்திரி. இந்த மனப்பான்மைக்கு இந்திய கல்வி முறையே காரணம் என்கிறார் இந்தக் கல்வியாளர். உயர்நிலைக் கல்வியில் விருப்ப பாடமாக ஸம்ஸ்க்ருதம் கற்பிக்கப்படுவதையே இவர் ஆதரிக்கிறார். கட்டாயமாக்கினால் கல்விச் சமூகம் பிளவுபடும் என்று சுட்டிக் காட்டுகிறார்.

ஸம்ஸ்க்ருதம் என்றால் ‘சாமி பாட்டு’ என்ற கருத்தை சாஸ்திரி துவக்கியுள்ள ‘சரஸ்வதி இயக்கம்’ தகர்க்கிறது. விஞ்ஞானம், சமூகவியல் உள்ளிட்ட வெவ்வேறு விஷயங்களில், நடப்பு சூழல் சார்ந்து நூல்கள் ஸம்ஸ்க்ருதத்தில் வெளியாவது தான் சரஸ்வதி இயக்கம். இவரே ஸம்ஸ்க்ருதப் பயிற்சி உள்பட பல தலைப்புகளில் 13 நூல்கள் எழுதியுள்ளார்.

இவரது சேவையை பாரத அரசின் மனித வளத்துறை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. கல்வியில் ஸம்ஸ்க்ருதத்தின் இடம் குறித்து ஆவு செயும் அரசின் குழுவில் சாஸ்திரி இடம்பெற்றுள்ளார்.

ஊக்கத்தின் ஊற்றுக்கண்!
*    சம்ஸ்க்ருதத்தில் சம்பாஷனை சாத்தியம் என்று செய்து காட்டியவர் கிருஷ்ண சாஸ்திரி.
*    பாமரர் முதல் பார்லிமென்டேரியன்கள் வரை பயிற்சி கொடுத்து சம்ஸ்க்ருதத்தில் பேச வைத்தவர் (அதனால் சபாநாயகர் பலராம் ஜாக்கர் சம்ஸ்க்ருதத்தில் பதவிப் பிரமாணம் எடுத்தார்!)
*    நாடு நெடுக சம்ஸ்க்ருத பாரதி செயல்வீரர்களுக்கு தனது பணியால் ஊக்கமூட்டி வருபவர்.
*    கிருஷ்ண சாஸ்திரிக்கு வாழ்த்துக்கள்!
– டாக்டர் ஆர். ராமச்சந்திரன் (சமஸ்கிருத பாரதி மாநில துணைத் தலைவர்)