வாசகர் பார்வை வாசகர் பார்வை

பெயருக்கு இனிஷியல் போல…

நான் சென்னை போரூரில் ஷேவிங் பிளேடு வாங்க பெட்டிக் கடைக்கு சென்றேன். 1 பாக்கெட் அதிகபட்ச விலை (–கீக) ரூ. 25 என போட்டிருந்தது. கடைக்காரர் 25 ரூபாய் என்றார். எங்கள் ஊரில் 23 ரூபாய்க்கு  தருவார்கள்” என்றேன். ஐயா, ஒரு பிளேடு 3 ரூபாய் என 30 ரூபாய்க்கு விற்பேன். நான் –கீகக்குத்தான் தருகிறேன்” என்றார்.

அதற்கு நான், எகுகூ யால் விலை ஏறவில்லை. பெட்டிக் கடையில் 25 க்கு விற்பது தவறில்லை. ஆனால் எகுகூயால் விலை ஏறிவிட்டது என கூறாதீர்கள். ஏற்கனவே உள்ள வரிதான் எகுகூ என்ற பெயரில் வாங்குகிறார்கள். வரி தான் எகுகூ என பெயர் சொல்லி ஏமாற்றுகிறார்கள்” என கூற, ஆமாம் சார்” என்றார் கடைக்காரர்.

பின், வரியில் வரும் பணம் அரசுக்கு செல்கிறது. மோடி என்ன வீட்டிற்கா எடுத்து செல்கிறார்? அரசுக்கு வருமானம் வந்தால், சாலை, மின்சாரம், குடிநீர், கட்டுமானம் என தேசப்பணிக்கு செலவாகப் போகிறது” என கூறினேன்.

உண்மைதான் ஐயா” என கடைக்காரர் ஒப்புக்கொண்டார். ஒரு குழந்தையை பெயர் சொல்லி கூப்பிடுகின்றோம். ஆனால் அதே குழந்தையின் பெயரை சர்டிபிகேட்டில் எழுதும் பொழுது இனிஷியல் சேர்த்து எழுதுகிறோம். இதுதான் எகுகூ” என்றதும், சரியாக சொன்னீர்கள் ஐயா” என மிக்க மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டார்.

ஒரு பெட்டிக்கடைக்காரருக்கு புரிகிறது; மற்றவர்கள் போட்டு குழப்புவது ஏனோ?

– கவிஞர் வலம்புரி வெங்கட், வாலாஜாபேட்டை

 

பக்தி ஒலிபரப்பை விழுங்கும் பிரச்சாரம்

நான் சில நாட்களாக வானொலியை கண்காணித்து வருகிறேன். இதன் மூலம் தெரிந்தது என்னவென்றால், அதிகாலை நேரத்தில் வானொலியில் காலை 3 மணியில் இருந்து திருகி பல பாடல்களையும் பக்தி பிரவசனங்களையும் கேட்க மக்கள் வானொலியை இயக்குகின்றனர். அந்த நேரத்தில் அகில இந்திய வானொலி நிலையத்தின் அ–, குஙி போன்ற அலைவரிசைகள் தெளிவாக இருப்பதில்லை ­ஈடிஞ்டிணாச்டூ ஆன இக்காலத்திலும். ஆனால் மதமாற்ற கும்பல்களின் ரேடியோ அலைவரிசைகள் டெல்லி பம்பாய், போன்ற மாநகரங்களில் இருந்து ஒளிபரப்பாவது தெளிவாகவும் அற்புதமாகவும் உள்ளது. அதனால் ரேடியோவை திருகுபவர்கள் தவறாக அவர்களின் தவறான பிரச்சாரத்தை கேட்கும்படி நேர்கிறது.  அவர்கள் பரமேஸ்வர் என்று கடவுளை காட்டி பிரசாரம் செய்து, மொபைல் நம்பர்களையும் கொடுக்கின்றனர். அந்த மொபைலில் தொடர்பு கொள்கின்றவர்களை மூளைச்சலவை செய்யமாட்டார்கள் என்பது என்னை நிச்சயம்? இந்த விஷயத்தில் கவனம் செலுத்தவேண்டும்.

– நா. ஸ்ரீகாந்த், ஸ்ரீரங்கப்பட்டிணம்