வாக்குத் திருட்டு குறித்து ராகுலின் 10 உருட்டுகள்

ண்ணுக்கு எட்டிய தூரம் வரை காங்கிரஸ் கட்சிக்கு விடியல் இல்லை என்ற நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு புலம்பி வருகிறார். அவரது உருட்டுகளுக்கு அளவே இல்லை. பொய்யும், புறட்டும் எல்லை மீறிச் செல்கின்றன. யாத்திரை, பேட்டி, ஊடகப் பதிவு என யாவற்றிலும் வாக்குத் திருட்டு குறித்து ராகுல் உண்மைக்குப் புறம்பானவற்றை வெளிப்படுத்தி வருகிறார். தேர்தல் ஆணையர்களுக்கு மிரட்டல் விடுக்கிறார். எதிர்காலத்தில் இண்டி கூட்டணி ஆட்சி அமைக்கும். அப்போது உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றெல்லாம் தேர்தல் ஆணையர்களை அச்சுறுத்துகிறார்.

பொதுவாக வாக்குத் திருட்டு பேசு பொருளாக உள்ளதே தவிர அதன் பின்னணி குறித்தோ, உண்மை தன்மை குறித்தோ, துல்லியமான பதிவுகள் வெளியாகாமலேயே உள்ளன. ராகுலின் 10 உருட்டுகள் குறித்தும், இவை உண்மைக்கு முற்றிலும் புறம்பானவை என்பது குறித்தும் அலசுவோம்.

உருட்டு 1: மஹாராஷ்ட்ராவில் வாக்காளர் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பு

மஹாராஷ்ட்ராவில் மக்கள் தொகையே 9.54 கோடிதான். ஆனால், வாக்காளர் எண்ணிக்கை 9.07 கோடி என்று ராகுல் கூறினார். ஆனால், இந்த 9.54 கோடி புள்ளி விவரம் தேர்தல் ஆணையம் தெரிவித்ததல்ல. மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிவு வெளியிட்ட புள்ளி விவரமும் அல்ல. இது காங்கிரஸ் தரப்பு இட்டுக் கட்டிய புள்ளி விவரம். காங்கிரஸ் தேர்தல் ஏஜெண்ட் யாரும் இதுகுறித்து ஆட்சேபனை தெரிவிக்கவே இல்லை. 17சி படிவத்தில் காங்கிரஸ் தேர்தல் ஏஜெண்டுகள் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளனர். வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது அபத்தமானது.

உருட்டு 2: கடைசி நேரத்தில் வாக்குப்பதிவு அதிகரிப்பு

மஹாராஷ்ட்ராவில் மாலை 5 மணிக்குப் பிறகு வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது என்று ராகுல் கூறினார். ஆனால் உண்மை இதற்கு முற்றிலும் மாறானதாக உள்ளது. கடைசி நேரத்துக்கு முன்பு வரை மணிக்கு 58 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் 5 மணிக்குப் பிறகு 32.5 லட்சம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

உருட்டு 3: சிசிடிவி பதிவுகள் அழிப்பு

1951ம் ஆண்டு மக்கள் பிரதிநித்துவ சட்டப்படி காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. 45 நாட்கள் சிசிடிவி பதிவுகளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். நீதிபதி உத்தரவின் பேரில் மட்டுமே இந்த பதிவுகளின் பிரதிகளை பெற முடியும். இந்த சிசிடிவி பதிவுகள் வேண்டும் என்று காங்கிரஸ் ஒருபோதும் கோரிக்கை வைக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல் வீண் பழி சுமத்தியுள்ளார். இந்தச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள ஷரத்துகளை உருவாக்கியதே காங்கிரஸ் அரசுதான் என்பதை ராகுல் மறந்து விட்டார்.

உருட்டு 4: மஹாதேவபுராவில்
வாக்குத் திருட்டு

பெங்களூரு மத்திய தொகுதியில் உள்ள மஹாதேவபுராவில் வாக்கு தில்லுமுல்லு செய்யப்பட்டது என்று ராகுல் கூறியுள்ளார். ஆனால் இதே தொகுதியில் இடம் பெற்றுள்ள சாந்தி நகர், சிவாஜி நகர், சர்வக்ஞா நகர், சாம்ராஜ் பேட்டை ஆகியவற்றில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது என்பதை அவர் கண்டுகொள்ளவே இல்லை.

உருட்டு 5: வீட்டு இலக்கம் பூஜ்ஜியம்

வீடற்றவர்களுக்கு பூஜ்ஜியத்தை இலக்கமாகக் கொடுப்பது பல்லாண்டு காலமாக நடைமுறையில் உள்ளது. இதை புரிந்து கொள்ளாமல் வீட்டு இலக்கம் பூஜ்ஜியம் என்று ராகுல் பிதற்றியுள்ளார்.

உருட்டு 6: பீகாரில் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

மரணம், புலம்பெயர்வு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குச்சீட்டு உள்ளிட்டவை காரணமாக வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். வாக்குச் சாவடி அளவில் காங்கிரஸ் ஏஜெண்ட் யாரும் இதுகுறித்து புகார் கூறவில்லை. இதிலிருந்தே ராகுலின் உருட்டில் உண்மையில்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

உருட்டு 7: ஒருவருக்கு நான்கு வாக்குகள்

டெல்லியைச் சேர்ந்த குருகிரத்சிங் டாங் என்பவருக்கு 4 வாக்குகள் உள்ளன. அவர் பலமுறை வாக்களித்துள்ளார் என்று ராகுல் கூறினார். இதை குருகிரத்சிங் டாங் மறுத்து, ராகுல் முகத்தில் கரி பூசியுள்ளார்.

உருட்டு 8: இரட்டை நிலைப்பாடு

காங்கிரஸ் வென்றால் ஒரு நிலைப்பாடு, தோற்றால் மற்றொரு நிலைப்பாடு என்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. ஹிமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்ற போது ராகுல் வாயை மூடிக்கொண்டிருந்தார். தில்லு முல்லு செய்ய நினைத்திருந்தால் மக்களவைத் தேர்தலில் 400 இடங்களில் பாஜக வென்றதாக அறிவித்திருக்க முடியாதா? உண்மையிலிருந்து பிறழக்கூடாது என்பதால்தான் பாஜகவின் வெற்றி உள்ளது உள்ளபடி 240 தொகுதிகளில் பதிவானது.

உருட்டு 9: வாக்குகள் மாயம்

ரஞ்சு தேவி தனது வீட்டில் இடம் பெற்றிருந்த 6 வாக்காளர்களின் பெயர்கள் காணாமல் போய் விட்டன என்று கூறியதாக ராகுல் உருட்டினார். ஆனால் உண்மையை சரிபார்த்த பிறகு இது தவறு என்று ரஞ்சு தேவியே வெளிப்படையாக அறிவித்து விட்டார்.

உருட்டு 10: பிரேசில் விவகாரம்

ஜெயிர் போல்சோனரோ, பிரேசில் தேர்தலில் தில்லு முல்லு செய்து வெற்றி பெற்றார். இதை ராகுல் காப்பி பேஸ்ட் செய்து கொண்டிருக்கிறார். இதை சர்வதேச பிரச்சனையாக்க முயலும் ராகுல் உண்மையிலேயே பாரதியக் குடிமகன் தானா?

கட்டுரையாளர்: செய்தியாளர், ஆர்கனைசர் ஆங்கில வார இதழ்

ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி