நிறுவனங்கள், பணக்காரர்கள் தங்கள் தங்கள் நடப்பு மற்றும் எதிர்கால உத்தேச வர்த்தக நிலவரத்திற்கு ஏற்ப வருமான வரியை உத்தேசமாக கணக்கிட்டு முன்கூட்டியே செலுத்துகின்றனர். அதன்பின் முழு நிதியாண்டிற்கான வரி, சலுகைகளை கணக்கிட்டு கூடுதலாக செலுத்திய தொகையை திரும்பப் பெறுகின்றனர். அவ்வகையில், நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 16 வரையிலான காலகட்டத்தில் நிறுவனங்கள், தனிநபர்கள் செலுத்திய முன்கூட்டியே செலுத்தும் வரி, 65.5 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, கடந்த 2020 – 21ம் நிதியாண்டின் இதே காலத்தில், 2 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. தற்போது, 3 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது தேசத்தின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதை எடுத்துக்காட்டுகிறது.