வரும் லோக்சபா தேர்தலில் 96 கோடி பேர் வாக்களிக்கின்றனர்:

வரப்போகும் லோக்சபா தேர்தலில் நாடு முழுதும் 96 கோடி வாக்காளர் ஒட்டளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய லோக்சபாவின் ஆயுட்காலம் மே மாதம் முடிகிறது. அதற்கு முன்னதாக தேர்தல் நடத்திட தேர்தல் கமிஷன் அதற்கான பணிகளை விரைவுபடுத்தி ஏப்ரல் 16ல் துவங்கும் என உத்தேசமாக தேதி நிர்ணயம் செய்துள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணைய வட்டார வெளியிட்டுள் தகவலில் கூறியிருப்பதாவது, கடந்த 2019 லோக்சபா நாடு முழுதும் தேர்தலில் 91 கோடியே 20 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றனர். வரும் 2024 லோக்சபா தேர்தலில் நாடு முழுதும் 96 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதில் 47 கோடி பேர் பெண் வாக்காளர்கள்.18 வயது முதல் 19 வரை வயதுடைய வாக்காளர்கள் ஒரு கோடியே 73 லட்ம் பேர். நாடு முழுதும் 12 லட்சம் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு அந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.