சீனாவிலிருந்து இந்தியாவுக்குள் அசாம் அருணாச்சல மாநிலம் வழியாக மேற்குவங்கத்துக்குள் பாயும் பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அசாம் மேகாலயா மிசோரம் அருணாச்சலப்பிரதேச மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது .மேலும் பருவமழையின் காரணமாக காரணமாகவும் பீகார் அசாம் மாநிலங்களில் ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நதியில் நீர்வரத்து அபாயகட்டத்தை மீறி இரண்டு அடி உயரதிற்கு தண்ணீர் பாய்ந்தோடி கொண்டிருக்கிறது பருவமழையும் தொடர்ந்து பெய்து வருவதால் 31 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது .
மழை வெள்ளத்தின் காரணமாக மாநிலத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர் சுமார் 30 லட்சம்பேர் பாதிக்கபட்டுள்ளனர் பார்ப்பேடா மாவட்டத்தில் மட்டும் சுமார் 8 லட்சம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அசாம் காசிரங்கா தேசிய பூங்காவின் 75%சதவீத பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது அசாம் முதல்வர் சர்வானந்த சோனாவலிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி மாநிலத்தின் வெள்ள நிலவரத்தையும் நிவாரணப்பணிகளையும் கேட்டறிந்தார் வெள்ள பாதிப்புகளை சமாளிக்க அசாமுக்கு தேவையான எல்லா உதவிகளையும் மத்திய அரசு என தெரிவித்தார்
முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடல் பேசிய முதல்வர் வெள்ளப்பாதிப்புகள் குறித்த விவரங்களை எடுத்துரைத்தார் இதையடுத்து அஸ்ஸாமுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு பேரிடர் மீப்பு குழு மூலமாக வழங்க உத்தரவிட்டுள்ளார் அண்டைமாநிலங்களான மேகலையத்திலும் மிசோரத்திலும் தொடர்ந்து ஒருவாரமாக மழை பெய்துகொண்டிருக்கிறது இ தனால் இரு மாநிலத்தி லும் சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்