அயோத்தியில் பிரம்மாண்டமாக அமைய உள்ள ராமர் கோயிலில் ராம நவமி அன்று ராமர் சிலை மீது சூரிய ஒளி படும் வகையில் கோயிலை வடிவமைக்க பிரதமர் மோடி பரிந்துரைத்துள்ளார்.
மேலும் பக்தர்கள் ராமரை முப்பரிமாண முறையில் தரிசிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய கேட்டுக்கொண்டுள்ளார்.
கோயில் நிர்வாகம் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.