ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த 2021-ம் ஆண்டு பிப்., 24 ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வரும் போரில் ஏராளமான பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இரு நாடுகள் தரப்பிலும் பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறித்து எந்த ஒரு தகவலும் வெளியிடப்படாமல் இருந்து வந்தது
இந்நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறி இருப்பதாவது: இந்த போரில் எங்கள் தரப்பில் இருந்து 31 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இது எங்களுக்கு பெரிய இழப்பு தான். அதே நேரத்தில் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிட முடியாது. அவ்வாறு வெளியிட்டால் ரஷ்யாவின் திட்டமிடலுக்கு உதவும் வகையில் இருக்கும் என்றார். உக்ரைன் அதிபர் பலியான ராணுவத்தினர் எண்ணிக்கையை வெளியிட்டுள்ள அதே நேரத்தில் ரஷ்யா ராணுவம் எந்த ஒரு இழப்புகள் குறித்தும் தகவல் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.