யுபிஐ; ஒரு மாதத்தில் 15.76 லட்சம் கோடி ரூபாய் மாற்றப்பட்டுள்ளது

டிஜிட்டல் பொருளாதாரமாக மாறுவதை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இன்று மக்கள் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை ரொக்கமில்லா டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி வருகின்றனர்.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் யுபிஐ அதிக பங்கைக் கொண்டுள்ளது, இதன் பயன்பாடு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்தஆண்டை விட இந்த ஆண்டு டிஜிட்டல் பரிவர்த்தனை எண்ணிக்கை 61 சதவீதமும், டிஜிட்டல் பரிவர்த்தனை தொகை 47 சதவீதமும்

அதிகரித்துள்ளது.

ஆகஸ்ட்-2023ல் மொத்தம் 10.58 பில்லியன் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன, மேலும் யுபிஐ மூலம் மொத்தம் 15.76 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இத்தகவலை நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா தனது

பதிவில் தெரிவித்துள்ளது. இந்தப் பதிவிற்குப் பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி, யுபிஐ பரிவர்த்தனைகள் 10 பில்லியனைத் தாண்டியுள்ளதாகப் பாராட்டியுள்ளார். பிரதமர் மோடி,  ;இது ஒரு அசாதாரண சாதனை. இது இந்திய மக்கள் முன்னேற்றத்தை ஏற்றுக்கொண்டதற்கும், அவற்றின் மீதான மரியாதைக்கும் சான்றாகும்.இந்தப் போக்கு வரும் காலங்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என்று கூறியுள்ளார்.