மார்கழி மாதம் துவங்கிவிட்டது. அதிகாலை எழுந்து கடும் குளிரிலும் பச்சை தண்ணீரில் குளித்து கோயிலுக்கு சென்று இறைவனை வழிபடுகின்ற நேரமிது. இளம் பெண்கள் தங்களது எதிர்கால வாழ்க்கை நல்லப்படியாக அமையவேண்டி மேற்கொள்ளக்கூடிய பாவை நோன்பு காலமும் இந்த மார்கழியில் வருகிறது. அதனுடனேயே ஆங்கில ஆட்சியின் நீட்சியாக அரசாங்க ஊழியர்கள் மாத சம்பளக்காரர்கள் மத்தியில் புத்தாண்டு வாழ்த்துக்களும் அதற்கு மறுப்புகளும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஆங்கிலேய ஆட்சியாளர்களின் நீட்சியாக ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சியினரின் ஆட்சியிலும் அதன் தொடர்ச்சியாக வந்த கழகங்களின் ஆட்சியிலும், தமிழர்களின் மரபு சார்ந்த பழக்க வழக்கங்களை பகுத்தறிவு என்ற போர்வையில் எள்ளி நகையாடுவதும் விமர்ச்சிப்பதும் அதிகரித்தது. ஒருபக்கம் தமிழ் ,தமிழ் என்று முழங்குவதோடு அதன் வளர்ச்சிக்கும் பெருமைக்கும் எதையும் செய்வதில்லை மற்றொரு பக்கத்தில் தமிழர்களுக்கு மதம் இல்லை என்று அவர்களை மதச்சார்பற்றவர்களாக காண்பிப்பதும் இவர்களின் வாடிக்கை. ஒருபக்கம் நாம் தமிழர்கள் என்பதும் தமிழுக்கே முக்கியத்துவம் என்று வாய் வார்த்தையாக பேசுவதோடு நின்று விட்டு ஆங்கிலத்துக்கு வாழ் பிடிப்பது இவர்களின் வாடிக்கை. ஆட்சியிலோ அலுவலகத்திலோ தமிழை பயன்படுத்தாதவர்கள் ஏன் உயர் கல்வியில் கூட பயன் படுத்தாதவர்கள் இரு மொழி கொள்கை என்று அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி அனைவரையும் ஆங்கிலேய அடிமைகளாக மாற்றி வந்துள்ளனர். இவர்களுக்கு தான் சார்ந்துள்ள தமிழின் மீதும் பற்றில்லை பிற இந்திய மொழியின் மீது வன்மத்தை ஏற்படுத்தி அதன் மீது வெறுப்பை ஏற்படுத்துவதோடு ஆங்கிலத்துக்கும் வால்பிடிப்பார்கள். அதனை தங்களது வாழ்வில் நடவடிக்கைகளில் தமிழ் சார்ந்த எந்த முக்கிய நடைமுறைகளையும் பின்பற்றுவதில்லை.
புத்தாண்டு என்று வந்தால், நாம் எல்லாம் தமிழர்கள் நமக்கு புத்தாண்டு சித்திரையே என்று சொல்ல மாட்டார்கள் ஏன் என்றால் அவர்களின் எஜமானர்களின் மனது புண்படும் என்பதால். ஆனால் அத்தனையும் குழப்பி தங்களது மனதுக்கு ஏற்ப தைமாதம் தமிழ் புத்தாண்டு என்று அறிவித்தனர். தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பும் இந்த கும்பல்கள் அதற்கு கூறிய காரணம் அப்போதுதான் அறுவடை முடிந்து புத்தரிசி புது காய்கறிகள் வருகிறது என்று காரணம் சொல்லியது,ஆனால் உண்மையில் உழைப்பே இன்றி பிறரின் உழைப்பில் வாழ்பவர்களுக்கு மட்டுமே இந்த புரட்டு வாதம் பொருந்தும் .தங்களது சொந்த உழைப்பில் வாழும் தமிழர்கள் தன்னம்பிக்கையும் சுய கெளரவமும் கொண்டவர்கள் .ஆள்கொண்டு போரடித்தால் மாளாத செந்நெல்லேன்று ஆணைகட்டி போரடித்த வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் . அதனாலதான் ஓர் ஆண்டை கார்காலம், குளிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனில்காலம், முதுவேனில்காலம் என ஆறு பருவங்களாக பிரித்தனர்.
- கார்காலம்; இது தமிழ் மாதமான ஆவணி, புரட்டாசி யை உள்ளடக்கியது.
- குளிர்காலம்: இது தமிழ் மாதமான ஐப்பசி, கார்த்திகை யை உள்ளடக்கியது. இலைகள் கூம்பி உதிர்வது கூதிர் எனப்படும்.
- முன்பனிக்காலம்: தமிழ் மாதமான மார்கழி, தை யை உள்ளடக்கியது.
- பின்பனிக்காலம்: இது தமிழ் மாதமான மாசி, பங்குனி யை உள்ளடக்கியது.
- இளவேனில்காலம்: இது தமிழ் மாதமான சித்திரை, வைகாசி யை உள்ளடக்கியது.
- முதுவேனில்காலம்: இது தமிழ் மாதமான ஆனி, ஆடி யை உள்ளடக்கியது.
பண்டைத் தமிழ் மக்கள் மாறிமாறி வரும் பருவ காலங்களைக் காலத்தின் மாற்றங்களாக மட்டும் கருதாமல் மக்கள் வாழ்வியலுடனும், அவர்கள் வாழும் நிலத்துடனும் பிணைத்துப் பார்த்தார்கள். தமிழர் நிலப் பிரிவுகளான முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை போன்றவற்றுக்கு உரித்தான பருவகாலங்களைப் பற்றித் தொல்காப்பியம் பேசுகிறது.
இப்படி தனக்கென ஒரு வராலாற்றை வாழ்வியலை தொன்று தொட்டு பயன்படுத்தி வந்ததை மறைத்து மிஷினரி கும்பல்களின் கருத்துக்கு ஏற்றவாறு நம்மையும் இழுத்து செல்லும் கருத்தியலின் அடிப்படையிலேயே இவர்கள் இயங்குகிறார்கள்.
புத்தாண்டு என்பது இலையுதிர்கலமான மாசி பங்குனி மாதம் முடிந்து இலைகள் துளிர்க்கும் நேரம். மரங்கள் தனது பழைய இலைகளை உதிர்த்துவிட்டு பச்சை பசேலென்று புதிய பசுமையான இலைகளை கொண்டு காட்சியளிக்கும். சூரியனும் தனது கதிர்களை மென்மையாக அதிக பாதிப்பின்றி வெளிப்படுத்தும். புதிய வேளாண்மையில் உழவர்களும் விவசாயிகளும் மும்முரமாக ஈடுபடும் காலம். முன்காலத்தில் தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு வசந்த விழா எடுப்பதும் இந்த காலத்தில்தான்.. மேலும் நமக்கு ஒரு நாள் என்பது அதிகாலையில் சூர்யஉதயத்தோடு துவங்கி பின்னிரவில் முடிவது ஒரு நாள் மாறாக நள்ளிரவில் தொடங்கி நள்ளிரவில் முடிவது ஆங்கிலேயர்களின் நாட்காட்டியின் வழக்கம். கலையில் குளித்து கோயிலுக்கு சென்று பெரியவர்களின் ஆசிர்வத்துக்காக அவர்களின் காலில் விழுவது நமது பண்பாடு. புத்தாண்டு என்ற பெயரில் ஆண்களும் பெண்களும் கூடி கும்மளமிட்டு குடித்து நடுத்தெருவில் வீழ்ந்து கிடப்பது ஆங்கிலேய பண்பாடு.எந்த சூழ்நிலையிலும் ஜனவரி நமக்கு புத்தாண்டாக ஆகமுடியாது நமக்கு நமது மண்ணின் மரபு சார்ந்த பழக்க வழக்கங்கள் நெறிமுறைகள் மட்டுமே நமக்கு வழிமுறையாக ஆக முடியும் அந்த வகையில் சித்திரை ஒன்றே நமக்கு புத்தாண்டு என்பதனை உணர்வோம்.