ஐநாவின் 24 ஆம் ஆண்டு பொதுக் கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 24 ஆம் தேதி துவங்கியது. அதில் பங்கேற்ற பிரதமர் மோடி யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது இந்தியாவின் பண்பாடு என்று கூறினார்
பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி பேசினார் நேற்று நடந்தது ஐநா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இந்தி மொழியில் பேசினார் சமீபத்தில் இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடந்தது என் மீதும் அரசு மீதும் 120கோடி மக்கள் நம்பிக்கை வைத்து வெற்றி பெறச் செய்தனர்
உலகம் போற்றும் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த ஆண்டை உலகம் முழுவதும் கொண்டாடி வருகிறது.அவரது அகிம்சை கொள்கையை இன்றும் நமக்கு பொருத்தமாக உள்ளது என்றும் கூறினார். தமிழகத்தைச் சேர்ந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ் வாசகத்தை ஐநா பொதுக்கூட்டத்தில் கூறி இதுவே எங்கள் நாட்டின் பண்பாடு. இந்திய நாடு கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பேணிக்காத்து வருகிறது என்று கூறினார்.
ReplyForward
|