பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் “மோடி கோ பேக்” என்று # குறியீட்டு ட்வீட்டரில், கும்பலாக குரல் எழுகிறது. யார், எங்கிருந்து இப்படி செய்கிறார்கள் என்று புத்தகப் பதிப்பாளர் ரங்கநாதன்(https://www.trendsmap.com) என்ற இணைய தளத்தை ஆய்வு செய்து அனுப்பிய ட்வீட் நமக்கு அதிர்ச்சியை கொடுத்தது, அதன்படி, “மோடி கோ பேக்” ட்வீட்-களில் 58 – சதவிகிதம் பாகிஸ்தானிலிருந்தும், 28 – சதவிகிதம் மற்ற நாடுகளிலிருந்தும், தமிழகத்துக்கு வெளியிலிருந்தும், 4-சதவிகிதம் மட்டுமே சென்னையிலிருந்தும் வந்திருக்கிறது. அதில் 62- சதவிகிதம் ஆங்கிலத்திலும், 23-சதவிகிதம் உருதுவிலும், 6- சதவிகிதம் தெலுங்கிலும், 2- சதவிகிதம் மட்டுமே தமிழில் என்றும் தெரிகிறது. எனவே மோடி கோ பேக் என்பது தமிழக கோஷமல்ல. முக்கியமாக பாகிஸ்தானின் கோஷம்தான்.