பலத்துக்கே வணக்கம் – முஸ்லிம் நாடுகள் விதிவிலக்கல்ல!

ஓ.ஐ.சி (organisation of Islamic Co-operation) என்று அழைக்கப்படுகிற இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பு இஸ்லாமிய நாடுகளின் ஒட்டு மொத்த குரலாக திகழ்கிறது. இது முஸ்லிம் நாடுகளின் நலனுக்காக செயல்படுகிறது. இந்த அமைப்பில் ௫௭ உறுப்பு நாடுகள் உள்ளன.

கடந்த தேர்தலில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் நாடுகளை நாம் பகைத்துக் கொள்ள வேண்டியதிருக்கும் என்று பிரச்சாரம் செய்தனர். அந்தக் கருத்தை பிரதமர் மோடி முறியடித்தார். கடந்த 5 ஆண்டுகளாக முஸ்லிம் நாடுகளுடன் நல்லுறவைப் பேணிக் காத்தார். அதன் காரணமாக மார்ச் ௧ம் தேதி நடைபெற்ற ஓ.ஐ.சி. மாநாட்டில் விசேஷ அழைப்பாளராக கலந்துகொள்ளும்படி நமது வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்ஜிற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்தியாவை அழைக்கக்கூடாது என்று கண்டித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஒ.ஐ.சிக்கு கடிதம் எழுதினார். ஆனால் ஓ.ஐ.சி அதைப் புறக்கணித்தது. திட்டமிட்டபடி சுஷ்மா சுவராஜ் கலந்துகொண்டு பயங்கரவாதத்தின் ஆபத்துகளை எடுத்துரைத்தார். பாகிஸ்தான் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வு மோடியின் ராஜதந்திரத்திற்குத் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். அதுமட்டுமல்ல, காஷ்மீர் சம்பவமும் அபிநந்தன் விடுதலை பற்றியும் உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவிற்கு ஆதரவாகவே நடந்து கொண்டன.

பிரதமர் மோடி வெளிநாடு செல்லும் போதெல்லாம் கிண்டலும் கேலியும் செய்தவர்கள் இப்போது வாயடைத்து போயுள்ளனர்.

பாகிஸ்தான் சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டதற்கு முக்கியமான காரணம் மத்தியில் நிலையான அரசும் துணிச்சலான பிரதமரும் இருந்ததுதான். இந்த சூழ்நிலை உருவானது எப்படி? 7௦ ஆண்டுகளாக இல்லாத விதத்தில் 5 ஆண்டுகளாக பாரத அரசு உலக அரங்கில் பாரதத்தை தலைநிமிரச் செய்து வந்திருப்பதால்தான்.

அதனால் வருகின்ற தேர்தலில் நரேந்திர மோடியா அல்லது பிரதமர் வேட்பாளர் யார் என்றே முடிவு செய்யாத ஊழல் கட்சிகளா என்று வாக்காளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.