அபிநந்தனுக்கு வாழ்த்துக்கள்

தமிழகத்தை சேர்ந்த விமானப்படை வீரர் விங் கமாண்டர் வர்தமான் அபிநந்தனைப் பற்றி, பாகிஸ்தானின் தலைசிறந்த ஆங்கிலப் பத்திரிகையான ‘டான்’ இப்படி எழுதியது.” அவர் எரிந்து விழும் விமானத்திலிருந்து பாரசூட்டில் வெளிவந்து பாகிஸ்தான் கைவச காஷ்மீரில் இறங்கிய பிறகு, அவரைச் சுற்றிய இளைஞர் கூட்டம் அவரைத தாக்க ஆரம்பித்தது. படுகாயம்பட்டு ரத்தம் சொட்டிக் கொண்டிருக்கும் நிலையில், அவர் கையிலிருந்த துப்பாக்கியை உயர்த்தி வனத்தில் சுட்டுக் கொண்டே பின்னோக்கி ஒரு கிலோமீட்டர் ஓடி, ஒரு குளத்தில் குதித்து தன பையில் இருந்த ரகிசய ஆவணங்களை வாயில் போட்டு மென்று தின்றுவிட்டார். துப்பாக்கி ஏந்திய அந்த இளைஞர் கூட்டம், அவரை துரத்தி வந்து மறுபடியும் தாக்கியது. ஒரு இளைஞர் அவரை காலில் சுட்டும் விட்டார். அந்த இளைஞர்கள் அபிநந்தனுக்குக் கொடுத்த சிரமத்தைவிட, அவர் அந்த வன்முறை கூட்டத்துக்கு அஞ்சாமல் கொடுத்த எதிர் தாக்குதல் அதிகம்” – என்று எழுதியது.அராஜக சக்திகள் எவ்வளவு தேச விரோத விஷத்தை பரப்பினாலும், அபிநந்தன் போன்ற அமிர்தம், அவர்கள் கக்கும் விஷத்தை ஜீரணித்து விடும்.