மொழிவாரி மாநிலங்கள் ஆசைப்பட்டதும் அவதிப்படுவதும்!

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, இதனை அரசு விழாவாகக் கொண்டாடி இருக்க வேண்டும் என்றும், மொழிவாரி மாநிலப் பிரிவினை நாளுக்கு (நவம்பர் 1) அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. ஆயினும் அந்தக் கோரிக்கைகள் வலுவானவையாக இருக்கவில்லை. அதற்குக் காரணம் இருக்கிறது. உண்மையில் மொழிவாரி மாநிலப் பிரிவினையில் தமிழகத்தின் பங்கு எதுவுமில்லை என்பதே அது.

1956-இல் நடைபெற்ற மாநிலப் பிரிவினையில் சென்னை மாகாணத்தின் கீழிருந்த மலையாளப் பகுதிகள் கேரளமாகின. ஆந்திரத்துக்கும் கேரளத்துக்கும் பிரிந்துபோன பகுதிகள் போக எஞ்சிய பகுதிகள் அனைத்தும்  சென்னை மாகாணம்’ என்றே அழைக்கப்பட்டன.

இதனிடையே, கேரளத்துக்கு கன்னியாகுமரி மாவட்டம் செல்லாமல் தடுக்க,  நேசமணி, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, தாணுலிங்க நாடார், டி.வி.ராமசுப்பய்யர் ஆகியோர் போராடி வென்றனர். அதேபோல, திருத்தணி பகுதி ஆந்திரத்துடன் செல்லாமல் தடுக்க ம.பொ.சிவஞானம் போராடி வென்றார். ‘மதராஸ் மனதே’ என்று தெலுங்கு அரசியல்வாதிகள் கோஷமிட்டபோது அதை எதிர்த்து ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம் போராடியது. இன்று சென்னை தமிழகத்தின் தலைநகராக இருப்பதே அதனால்தான். இவர்கள் எவருமே, திராவிட அரசியல்வாதிகள் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

‘அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு’ என்று முழக்கமிட்டவர் அண்ணாதுரை. மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகும்கூட, இப்போதும் திராவிட நாடு கோரிக்கைக்கான காரணங்கள் இருக்கின்றன என்றார் அவர். அவரது வழி வந்தவர்கள், இன்று மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நாளைக் கொண்டாட வேண்டும் என்று குதூகலிப்பதன் ரகசியம், அதற்கு தாங்கள் போராடியதான தோற்றத்தை இப்போதைய தலைமுறையிடம் உருவாக்கவே.

இதில் குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம், திராவிடநாடு கோரிக்கையும் சரி, மொழிவாரி மாநிலப் பிரிவினையும் சரி, இரண்டுமே தேசபக்தர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டவை. முதலாவது கோரிக்கை பிரிவினையை அப்பட்டமாகக் கொண்டிருந்ததால் முளையிலேயே கிள்ளப்பட்டது. தவிர, அதற்கு திராவிட நாடு கருத்தியலில் அங்கம் வகித்த  தமிழ் தவிmozi-vari-manilamர்த்த மலையாளம், கன்னடம், துளு, தெலுங்கு பேசும் மக்கள் வாழ்ந்த பிற பகுதிகளில் ஆதரவு கிடைக்கவில்லை. அந்தத் தலைவர்கள் யதார்த்த நிலவரம் உணர்ந்து மொழிவாரி மாநிலமே போதும் என்ற முடிவை எடுத்தபோது, திமுகவால் அதை வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது.

இதுவே சரித்திரம். ஆனால், இப்போது மொழி அடிப்படையில் தமிழ்நாடு அமையப் போராடியது போன்ற தோற்றத்தை உருவாக்க திமுகவும், அதன் தோழமை அமைப்புகளும் முயல்கின்றன. தமிழத்திலேயே கூட, தனிநாடு கோரிக்கைக்கு மக்கள் தயாராக இல்லாததால்தான், தனித் தமிழ்நாடு கோரிக்கையை கைகழுவினார் அண்ணாதுரை. அவர்களது சுருதி மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுய ஆட்சி’ என்பதாகச் சுருங்கியது.

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படுவது நமது தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகமாகிவிடும் என்று தேசபகதர்கள் அன்று அஞ்சியது உண்மையாகிவிட்டது. இன்று மாநில எல்லைப் பூசல்கள் பல இடங்களில் பூதாகரமாகி வருகின்றன.

இதிலும் ஒரு விசேஷ அம்சம் உண்டு. ஒரே மொழி பேசும் மாநிலத்துக்குள் கூட நதிநீரைப் பங்கிடுவதில் மோதல் நிகழ்கிறது. தமிழகத்திலேயே பவானி அணை நீரைப் பயன்படுத்துவதில் முன்னுரிமை யாருக்கு என்பதில் உள்ளூர் விவசாயிகளிடம் மோதல் நிலவுகிறது. ஆக, மோதலுக்குக் காரணம் சுயநலம் தானே ஒழிய மொழியால் விவசாயிகளை ஒருங்கினைக்க முடியவில்லை என்பது புரிகிறது.

மொழிவாரி மாநிலங்களுக்கு வித்திட்டது ஆந்திரப் பிரதேச உதயம். இன்று அதே மாநிலம் இரண்டாகிவிட்டது – ஆந்திரம்- தெலுங்கானா என்று! ஒரே தெலுங்கு மொழி பேசும் மக்கள் வாழும் பகுதிகள் இரு மாநிலங்களாகப் பிரிந்ததன் காரணம் அரசியல் மட்டுமே. இங்கு மக்களை மொழியால் பிணைக்க முடியவில்லை.

மராட்டி பேசும் மக்களை அடிப்படையாகக் கொண்டே மகாராஷ்டிரா மாநிலம் அமைந்தது. இன்று அதே மாநிலத்தில் விதர்ப்பா தனி மாநிலக் கோரிக்கையை அதே மொழி பேசும் மக்கள் தானே எழுப்புகின்றனர்? அதற்கு பொருளாதார ரீதியாக தாங்கள் பின்தங்கி இருப்பதை விதர்ப்பா பகுதி மக்கள் காரணமாகக் கூறுகின்றனர். தெலுங்கானாவும் அதே காரணத்தால் தான் பிரிந்தது. எனில், மக்களை மொழிவாரியாகப் பிரித்தது, நிர்வாக ரீதியாகப் பலனளிக்கவில்லை என்பது உறுதியாகிறது.

மொழிவாரி மாநிலம் அமைந்ததைக் கொண்டாடத் துடித்தவர்கள் பலரும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர்களாக இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. நல்ல வேளையாக தமிழக அரசு அவர்களது முட்டாள்தனமான உளறல்களைப்   டூ

 

 

நல்லதொரு முன்னுதாரணம்

தற்போது, ஆந்திரப் பிரதேசம்- தெலுங்கானா மாநிலங்களிடையே கிருஷ்ணா நதி நீரைப் பங்கிடுவதில் மோதல் உச்சத்தை எட்டி இருக்கிறது. இரு மாநிலங்களிலும் தெலுங்கு பேசும் சகோதர மக்களே இருந்தபோதும், இப்பிரச்னை நேரிட்டதன் காரணம் சுயநல அரசியல் தான். சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ் ஆகியோரிடையிலான தனிப்பட்ட விரோதம், இரு மாநில மக்களை மேலும் பிரித்தாள்கிறது. அதேசமயம், அதே கிருஷ்ணா நதியிலிருந்து தமிழகத்துக்கு தெலுங்கு கங்கை திட்டம் வாயிலாக குடிநீர் வருகிறது. அதனால்தான் சென்னை வாழ்கிறது. மொழி கடந்த தொலைநோக்குப் பார்வையுடன் அதனை சாத்தியமாக்கிய முன்னாள் முதல்வர்கள் என்.டி.ராமராவும், எம்.ஜி.ராமசந்திரனும் இன்றும் போற்றப்படுவதன் காரணம் இதுவே. நாம் பின்பற்ற வேண்டிய முன்னுதாரணமும் இதுவே!

 

தேசிய உள்ளங்களால் பிறந்த ‘தமிழ்நாடு’

பெரும்பாலும் தமிழ் பேசும் மக்களே அதிகமாகக் கொண்ட சென்னை மாகாணத்துக்கு       ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் ஒரு காங்கிரஸ் தலைவரால்தான் முன்னிறுத்தப்பட்டது. அவர் தியாகி சங்கரலிங்கம். அதற்காக, அவர் விருதுநகரில் 1956 ஜூலை 27 முதல் 1956 அக். 13 வரை 78 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார். அதன் விளைவாக, காமராஜர் முதல்வராக இருந்தபோது (1962) தமிழ்நாடு மாநிலப் பெயர் மாற்றத்துக்கான தீர்மானம் சட்டசபையில் கொண்டுவரப்பட்டது. பக்தவத்சலம் முதல்வராக இருந்தபோதும் (1964) இதே தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அவை நிறைவேறவில்லை. திமுக ஆட்சி அமைத்த பின்னரே, அண்ணாதுரை முதல்வரான பின், தமிழ்நாடு என்று சென்னை மாகாணம் பெயர்மாற்றம் பெற்றது (1968, ஜூலை 18). அதன் காரணமாக, தமிழ்நாடு உருவாக திராவிட இயக்கங்களே போராடியது போன்ற தோற்றம் உருவாகிவிட்டது.