ஒரு மைக்ரோ மீட்டர் முதல் 5 மில்லி மீட்டர் வரையிலான மைக்ரோ பிளாஸ்டிக் (நுண் நெகிழி) 1 மைக்ரோ மீட்டருக்கும் குறைவான நானோ பிளாஸ்டிக் (மீ நுண் நெகிழி) ஆகியவை நமது உணவு, நீர், காற்று என அனைத்திலும் ஊடுருவி, தோல் வழியாக உடலுக்குள் நுழையும் அபாயகரமான மாசுபாடுகளாகும். இந்த மிகச்சிறிய துகள்கள், மனித இரத்த ஓட்டத்தில் எளிதில் கலந்து கல்லீரல், சிறுநீரகம், மூளை போன்ற முக்கிய உறுப்புகளில் சென்று படிகின்றன. மற்ற உறுப்புகளை விட மூளையில் 20 முதல் 30 மடங்கு அதிக நெகிழித் துகள்கள் சேர்வதாகவும், ஒருவரின் வாழ் நாளில் இது சுமார் 7 கிராம் வரை இருக்கலாம் என்றும் அதிர்ச்சியூட்டும் ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
மிகவும் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்த நுண் நெகிழிகள் மூளையின் பாதுகாப்பு கவசமான ‘இரத்த-மூளைத் தடையை’ (blood−brain barrier) தாண்டி, அதன் செயல்பாடுகளைச் சீர்குலைக்கின்றன. உடலின் மீது இவற்றின் தொடர்ச்சியான தாக்கம், நரம்பியல் கோளாறுகள், இனப்பெருக்கப் பிரச்சனைகள், நோய் எதிர்ப்பு மண்டலச் செயலிழப்பு மற்றும் புற்றுநோயைக் கூடத் தூண்டக்கூடும். மூளை ஒருமுறை சேதமடைந்தால், அது தன்னைத்தானே சரி செய்துகொள்ளும் திறன் மிகக் குறைவு என்பதால், இத்தகைய பாதிப்புகள் மீள முடியாதவையாக மாற வாய்ப்புள்ளது.
உப்பு, சர்க்கரை, அரிசி, மீன், இறைச்சி போன்ற நமது அன்றாட உணவுப் பொருட்களிலும் இந்த நெகிழிகள் ஊடுருவி, அடிப்படை உணவையே நஞ்சாக்குகின்றன. மேலும், நானோ பிளாஸ்டிக் துகள்கள் மனித தொப்புள் கொடி, நுரையீரல் மற்றும் இரத்த ஓட்டத்திலும் கண்டறியப்பட்டிருப்பது உலக அளவில் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய ஆய்வுகளில், வளி மண்டலத்தில் உள்ள மேகங்கள், அண்டார்டிக் பனிப் பாறைகளில் கூட மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது, நெகிழி மாசுபாடு வளி மண்டலம் வழியாக உலகம் முழுவதும் பரவி வருவதை உறுதி செய்கிறது. எனவே, இது கடல் அல்லது நகரங்களுக்குள் மட்டும் உள்ள பிரச்சனை அல்ல இது ஒரு பூகோளப் பிரச்சனை.
மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக்கு
களின் பெருக்கம் ஒரு மௌனமான நெருக்கடியாகும். போதிய விழிப்புணர்வும், நமது வாழ்க்கை முறையில் மேற்கொள்ளும் சிறு மாற்றங்களும் இதன் பாதிப்பிலிருந்து நம்மைக் காத்து, நமது ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும். உங்களுக்காகவும், நமது எதிர்கால சந்ததியினருக்காகவும் இப்போதே செயல்படுங்கள்
பாதிப்பைக் குறைக்க சில எளிய வழிகள்
- நெகிழிப் பைகளுக்குப் பதிலாகத் துணிப் பைகளைப் பயன்படுத்துங்கள்.
- உணவை நெகிழிப் பெட்டிகளில் சேமிக்காமல் எவர் சில்வர் பாத்திரங்களில் வையுங்கள்.
- பேக் செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களைத் தவிர்த்து, தானியங்கள், மசாலாப் பொருட்
களை உதிரியாக வாங்குங்கள். - நெகிழி ஸ்ட்ராக்கள், கரண்டிகள், பாட்டில்களைத் தவிர்ப்பது நல்லது.
- நெகிழித் தண்ணீர் பாட்டில்களுக்குப் பதிலாக எவர் சில்வர் அல்லது கண்ணாடி பாட்டில்களைப் பயன்படுத்துங்கள்.