மூன்று ஆண்டு பாஜக ஆட்சியில் ‘ஒளி’வீசுது புத்தொளி பரவுது!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்று ஆண்டுக்கால தேசிய ஜனநாயக கூட்டணி அரசு குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்துள்ளது. இது ஊழலற்ற ஆட்சி.

ஊழல்வாதிகளுக்கு இடமில்லாத அளவுக்கு கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. மொரீஷியஸ், சைப்ரஸ், சிங்கப்பூர் வழியாக கருப்பு பணம் கொண்டு வருவதை தடுக்க பல்வேறு நாடுகளுடன் பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. மோசடி மூலம் வெளியே கொண்டு செல்லப்பட்ட பணத்தை இனி மொரீஷியஸ், சிங்கப்பூர் மற்றும் சைப்ரஸ் வழியாக இந்தியாவுக்குள் கொண்டு வர முடியாது.

சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுடன் நிகழ்நேர பரிமாற்ற விவரங்களை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 2019ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து இந்தியாவில் இருந்து மேற்கொள்ளப்படும் பணப்பரிமாற்றம் பற்றிய விவரங்களை சுவிஸ் வங்கிகள் தகவல்களை பரிமாறிக் கொள்ளும். இதன் மூலம் நிதிமோசடி தடுக்கப்படும்.

வருமான வரித்துறை, 2014 முதல் 2016 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கணக்கில் காட்டப்படாத வருவாயான ரூ.43,000 கோடியை புலனாய்வு மூலம் கண்டுபிடித்துள்ளது என்று மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா 2016 ஜூலை 2 அன்று தெரிவித்திருந்தார்.

2016ம் ஆண்டில் ஒரே ஒரு முறை மன்னிப்பு திட்டத்தின் கீழ், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வருவாய் (கருப்பு பணம்) தெரிவித்தல் குறைப்பட்சமாக ரூ.65,250 கோடி. கணக்கில் காடப்பட்டாத சொத்து. இதன் மூலம் அரசுக்கு ரூ.29,362 கோடி வரி வருவாய்.

நிலக்கரி சுரங்கங்கள், அலைக்கற்றை, கனிமங்கள் ஆகியவற்றை இணையதளம் மூலம் ஏலம் விடும் விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இனி வருங்காலத்தில் ஆட்சிக்கு வரும் எந்த ஒரு அரசும், இதை எளிதில் மாற்றிவிட முடியாது.

அரசியல் கட்சிகளுக்கான ரொக்க நன்கொடை உச்சவரம்பு ரூ.2,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், அரசியல் கட்சிகளுக்கான நிதியை தூய்மைப்படுத்தும் நோக்கத்துடன், ‘எலக்ட்டோரல் பாண்டு’கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பிரதமராக மோடி பதவியேற்ற நாளில் இருந்தே இந்த தூய்மைப்படுத்தும் பணிகள் தொடங்கிவிட்டன. பதவியேற்ற சில நாளிலேயே புதிய அரசு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஊழல் பற்றி ஆராய சிறப்பு விசாரணை குழு (எஸ்.ஐ.டி.) அமைத்தது.

ஜி20 மாநாட்டில் மோடி கொடுத்த அழுத்தத்தின் மூலம் ஜி20 அமைப்பில் இருக்கும் பல்வேறு நாடுகள், நிதி மோசடி, கருப்பு பணம் மற்றும் தீவிரவாத அமைப்புக்கான நிதியுதவி ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தொடங்கின.

எல்லா நடவடிக்கைகளுக்கும் தாயான நடவடிக்கை, 2016 நவம்பர் 8, இரவு 8 மணிக்கு வந்தது! கருப்பு பணத்தை வெளிக் கொண்டு வரும் வகையில், புழக்கத்தில் இருந்த ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இது நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள அவற்றின் முன்பு நீண்ட வரிசைகள் கருப்புப் பணத்தை தூய்மைப்படுத்தும் பணிக்காக மக்கள் இந்த கஷ்டங்களை தாங்கிக் கொண்டனர்.

18 லட்சம் பேர் கணக்கில் வராத தொகையை வங்கிகளில் டெபாசிட் செய்தது கண்டறியப்பட்டு, அவர்களிடம் அதற்கான கணக்கை கேட்டு வருமான வரித்துறை விளக்கம் கேட்டுள்ளது. இதுபோன்றவர்களில் பலர், ‘ஜன் தன்’ கணக்குகளையும் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

இந்த நடவடிக்கையை சர்வதேச நிதி அமைப்புகளும் பாராட்டியுள்ளன. இந்தியா தற்போது வர்த்தகத்துக்கு சிறப்பான இடத்தில் உள்ளது என்று சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. 2017 மே 4 அன்று ஆசிய வளர்ச்சி வங்கி, சரக்கு – சேவை வரி சட்டத்தை அமல்படுத்தும் பிரதமர் மோடியின் நடவடிக்கையை பாராட்டியது. இந்த வரி முறை, நாட்டில் மறைமுக வரிகளை ஒழுங்குப்படுத்த உதவும் என்றும், திவால் நடவடிக்கைகளை தடுக்க உதவும் என்றும் தெரிவித்தது. ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் தகேஹிகோ நகாவோ, இந்திய பொருளாதாரம் இந்த நிதியாண்டில் 7.4 சதவீதமாக வளரும் என்றும், அடுத்த நிதியாண்டில் 7.6 சதவீதமாக வளர்ச்சி அடையும் என்றும், வர்த்தகத்துக்கு இணக்கமான சூழ்நிலை உள்ளது என்றும் கூறினார்.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பல்வேறு சீரிய நடவடிக்கைகளால், சீனாவை பின்னுக்கு தள்ளி, விரைவான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாகவும், வர்த்தகத்துக்கும், வெளிநாட்டு முதலீட்டுக்கும் உகந்த சூழ்நிலை கொண்ட நாடாகவும் இந்தியா மாறியுள்ளது.

இதற்கு முன்னதாக, பெருமளவு மானியம் விரயமாகிக் கொண்டிருந்த மக்கள் நலத்திட்டங்களை அரசு ஒழுங்குப்படுத்தியது. ஜாம் (ஜன் தன் – ஆதார் மொபைல்) அடிப்படையில் நேரடியாக மானியம் அளிக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தியது. 65 அமைச்சகங்கள் துறைகளின் கீழான 536 திட்டங்களை இலக்காக கொண்டுள்ளது.

‘உஜ்வாலா’  (வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு) எல்பிஜி இணைப்பு வழங்கும் திட்டம் முதல் ‘உஜாலா’ (உள்நாட்டை பிரகாசப்படுத்தும் சோலார் விளக்குகள் திட்டம்) வரை, குறிப்பாக பெண்களை மகிழ்ச்சிக்கு உட்படுத்துவதாக அமைந்துள்ளது. இது மின்கட்டணத்தை குறைக்கும் வர்த்தகச் செலவை குறைக்கும்.

மூன்று ஆண்டுக்கால மோடியின் ஆட்சிக்காலம், ஏழைகளுக்கான நம்பிக்கையை உயர்த்தும் வகையிலும், வாய்ப்புகளை பெருக்கும் வகையிலும் உள்ளது. புதிய சகாப்தத்தை உருவாக்கும் ஒரு தொடக்கமும் கூட

(கட்டுரையாசிரியர் டெல்லியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்.)

நன்றி: பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை.

 

பாஜக

மூன்றாண்டு முழக்கம்

* 2 கோடி – மோடி எல்லா திட்டங்களின் பயனாளிகளுக்கு எழுதும் கடிதங்கள்.

* 10 கோடி – குறுந்தகவல்கள் (எஸ்.எம்.எஸ்.)

* இது தவிர டிவி, நாளிதழ்களில் விளம்பரங்கள்…

* பாஜக ஆட்சியிலமர்ந்தது மே 26. அன்று முதல் இரு வார காலம் நிகழ்ச்சிகள்.