மும்பையில் முத்துராமலிங்கத்தேவர்

மும்பை பாஜக தமிழ் பிரிவின் மும்பை செம்பூர் வார்ட் எண் 151 சாகர் நகர், சாலை எண் 9, செல்காலனி -டக்கர்பாபா செல்லும் சாலையில் சமாஜ் கல்யாண் மந்திர் பக்கத்தில் உள்ள சதுக்கத்திற்கு ‘பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சதுக்கம்’ என பெயர் வைக்க மும்பை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு முயற்சித்த மும்பை மாநகராட்சி M/WEST வார்டு முன்னாள் சேர்மேனும், கவுன்சிலருமான ராஜேஷ் புளுவாரியாவுக்கு மும்பை பாஜக தமிழ் பிரிவு தன் நன்றியை தெரிவித்துள்ளது.