பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் (டிஏசி) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது
எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டு டிஏசி சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், முப்படைகளும் அவசரத் தேவையின் அடிப்படையில் ரூ.300 கோடி வரை ராணுவ தளவாட கொள்முதல் செய்துகொள்ள சிறப்பு அதிகாரம் அளிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவு, கொள்முதல் காலக்கெடுவை சுருக்கி, கொள்முதலுக்கான உத்தரவுகளை (ஆா்டா்) 6 மாதங்களுக்குள் பிறப்பிப்பதை உறுதி செய்யும் என்பதோடு ஆா்டா்கள் விநியோகம் ஓராண்டுக்குள் தொடங்குவதையும் உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.