விவசாயத்துறையின் முக்கிய சீர்திருத்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறி இருக்கின்றன. இந்த சீர்திருத்த மசோதா மிக அடிப்படையான, முக்கியமாக தேவைப்பட்ட ஒன்று. ஆனால் அரசியல் உள்ளிட்ட காரணங்களுக்காக பல வருடங்களாக கிடப்பில் கிடந்தது. பாரதத்தில் உள்ள மொத்த விவசாயிகளில் 86 சதவிகித விவசாயிகள் 5 ஹெக்டருக்கும் குறைவாக விவசாய நிலம் வைத்திருப்பவர்கள். ஒரு விவசாயி தான் விளைவித்த விளைபொருளை நேரடியாக வாங்குபவருக்கு லாபகரமான விற்க வழி இல்லாமல் இருந்தனர். காரணம் மண்டி, இடைத்தரகு, கமிஷன், அரசியல், அறியாமை போன்றவை. இதை பயன்படுத்தி விவசாயிகளை அரசியல் கட்சியினர் பிரித்து அரசியல் செய்ய பயன்படுத்திக்கொண்டனர் என்பதே உண்மை. ஒரு விவசாயி தன் விளைபொருளுக்கு தானே குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க முடியாத நிலை. மாநிலத்திற்குள்ளே, மாநிலங்களுக்கு இடையே விளைபொருளை விற்பதில் இருக்கும் இடைத்தரகு சிக்கல்கள். சேமித்து வைக்க சேமிப்பு கிடங்குகள் இல்லாமை என்று ஒரு விவசாயி எதிர்கொள்ளும் சிக்கல்கள் பல. தற்போது இந்த மசோதா விவசாயிகளுக்கு சிக்கல்கள் நீங்கி, தாங்களே விளைபொருளுக்கு விலையை நிர்ணயித்து கூடுதல் லாபமடைய வழி செய்கிறது. எனவே இதுவரை இடைத்தரகு, அரசியல், பொருளாதார ரீதியாக லாபமடைந்து கொண்டிருந்தவர்கள் இதனை எதிர்க்கின்றன.விவசாயிகளை குழப்பி தவறாக வழி நடத்துகின்றனர். இந்த மசோதாவை எதிர்க்கும் காங்கிரஸ் ஒரு காலத்தில் இதே சீர்திருத்தங்களை தங்கள் 2019 தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது.
ராகுல், தங்கள் கட்சியால் முன்பு வாக்குறுதியளிக்கப்பட்ட அதே சீர்திருத்தங்களை தற்போது ஏன் எதிர்க்கிறார் என்பது புதிரானது.