மீண்டும் 1989 – 98 ஆ ?

இண்டி கூட்டணியின் ஒரே குறிக்கோள் மோடியை தோற்கடிப்பது . அவரை எதிரியாக்கி ராகுல் காந்தி தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரையும் கடந்த மே மாதம் கர்நாடகாவில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்ததாலும் ஏற்பட்ட ஆரவார கூச்சலும் கடந்த டிசம்பரில் வடமாநிலங்களில் அதற்கு ஏற்பட்ட படுதோல்வியினால் பிசுபிசுத்து போயுள்ளது.

இண்டி கூட்டணியை ஆரம்பித்த நிதீஷ்குமார் பின்னர் வெறுப்புற்று எதிரணியில் இருந்த மோடியுடன் சேர்ந்து விட்டார். காங்கிரசை மேற்கு வங்கத்திலிருந்து வெளியேற்றி விட்டார் மம்தா பானர்ஜி. கம்யூனிஸ்டுகள் கேரளா உட்பட எல்லா இடங்களிலும் காங்கிரசை எதிர்க்கிறார்கள். தெலுங்கானாவில் கம்யூனிஸ்டுகளை பந்தாடுகிறது காங்கிரஸ். இந்நிலையில் 2004 -14 வரை இருந்த நிலையை இண்டி கூட்டணி மீண்டும் ஏற்படுத்தாது என்பதையும் 1989 – 98 நிலை மீண்டும் வராது என்பதையும் அனைவரும் அறிவார்கள்.

மக்கள் முன்பு வாய்ப்புகள் தெளிவாக உள்ளன. இந்தியாவை மூன்றாவது வலிமையான பொருளாதார சக்தியாக மாற்றுவதாகவும், 2047 க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கி காட்டுவதாகவும் கூறும் மோடியை மீண்டும் தேர்ந்தெடுப்பதா அல்லது மக்கள் மறந்துவிட்ட, பத்தாண்டுகளில் அரை டஜன் பிரதமர்களையும் நான்கு பொதுத் தேர்தல்களையும் திணித்த இண்டி கூட்டணியா?

நன்றி – நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
14-4-24