உ.பியில் ‘மிஷன் சக்தி’ எனும் இயக்கத்தை முதல்வர் யோகி ஆதித்தியநாத் துவங்கிவைத்தார்.
இதில் பொதுமக்களுக்கு ‘மிஷன் சக்தி’ குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
பெண்கள் குழந்தைகளுக்கு 1090, 181, 1076, 112 ஆகிய தொலைபேசி எண்களின் முக்கியத்துவம் எடுத்துரைத்தல், பிராந்திய மொழிகளான போஜ்புரி, பண்டேல்கண்டி மொழிகளில் சேவை, ஒவ்வொரு வட்டத்திலும் உள்ள காவல் நிலையங்களில் பெண்களுக்கென தனி பெண் அலுவலர், ஓய்வெடுக்கும் அறை, பாதுகாப்புக்கு சிசிடிவி கேமராக்கள் போன்றவை உருவாக்கப்படும். இது அடுத்த மாதம் ஏப்ரல்வரை முழுவீச்சில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.