மாவோயிஸ்ட் எண்ணிக்கை குறைவு

2017 நிலவரப்படி, ஆயுத பயிற்சி பெற்ற மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 6000 ஆக இருந்ததாகவும், தற்போது இது 3722 ஆக குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மக்களை ஈர்ப்பதற்காக மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக வெளியாகி வந்த நாளிதழ்களும் தற்போது குறைந்துள்ளது. மாவோயிஸ்டுகளால் தற்போது இளைஞர்களை குறிப்பாக படித்த இளைஞர்களை தங்கள் பக்கம் இழுக்க முடியாமல் போனதும், எல்லை பாதுகாப்பு படையினரின் தீவிர கெடுபிடிகளுமே மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்ததற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தில் இருந்து ஒரு லட்சமாக குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆந்திரா, தெலுங்கானா மட்டுமின்றி மேற்குவங்களம், பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களிலும் மாவோயிஸ்டு இயக்க முக்கிய தலைவர்கள் பலர் என்கவுன்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டதாலும், சிலர் சரணடைந்து விட்டதாலும் மாவோயிஸ்டுகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது

One thought on “மாவோயிஸ்ட் எண்ணிக்கை குறைவு

  1. மக்களோடு மக்களாக கலந்து கொண்டனர். சமூக ஆர்வலர்களாக , பத்திரிக்கை செய்தியாளர், BSNL தொலைபேசி, ஊடகங்களில் செய்தி செய்தியாளர், ஆசிரியர்கள் , வியாபாரிகள் என பல்வேறு வகையான நாட்டை நாசமாகும் நக்ஸல் அமைப்பைச் சார்ந்தவன் ஊடுருவிய நிலையில் உள்ளனஉள்ளனர்.

Comments are closed.