மாவோயிஸ்டுகள் கையில் காட்டில் துப்பாக்கி, நாட்டில் பத்திரிகை!

மாவோயிஸ்ட்கள் பொது மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களிலும் பொது அமைப்புகளிலும் ஊடுருவியுள்ளார்கள். மீடியாக்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வி  நிலையங்கள் போன்றவற்றில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் தங்களின் பங்குக்கு செயல்படுகிறார்கள்.  இவ்வாறு செயல்படும் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பெரும்பாலும் ‘அறிவுஜீவி’கள்.
சில வருடங்களுக்கு முன் மத்திய அரசு,  மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாக களத்தில் உள்ள தொண்டு நிறுவனங்களின் எண்ணிக்கை  128 என கண்டறிந்தது. கேரளாவிலும் தமிழகத்திலும் நான்கு அமைப்புகள் தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் வேறு காரியங்களுக்கு நிதி வசூலித்து, மாவோயிஸ்ட்களுக்கு வழங்குவதாக மத்திய  அரசு நாடாளுமன்றத்தில்  ஒரு கேள்விக்கு பதில் அளித்தது.

சில வழக்கறிஞர்கள் மாவோயிஸ்ட் ஆதரவாளர்களாக உலவுகிறார்கள். தேனி மாவட்டத்தைச் சார்ந்தவரும் குடியுரிமை பாதுகாப்பு நடுவத்தின் பொறுப்பாளருமான முருகன் கைது செயப்பட்டார்.  ஏன் முருகன் கைது செயப்பட்டார் என்பதற்கான காரணங்களை தெரிந்துகொள்வதற்கு முன் ஊடகங்கள், ‘வழக்கறிஞர் கைது’ என தலைப்பிட்டு வேறு காரணங்களை முன் வைக்கும் கொடுமையும்  நடக்கிறது.   முருகன் கைது செயப்பட முக்கியமான காரணம், மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்த சந்திரா, கலா என்ற இருவருக்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்ததுதான். கேரளத்தில் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கறிஞர்கள் அஜிதா, தேவராஜ்  ஆகியோர் நினைவாக பழிக்கு பழி வாங்க முருகனின் தம்பி வேல்முருகன் திட்டம் தீட்டியதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே கைது செயப்பட்டான். அவன் குடும்பத்தில் அனைவருமே மாவோயிஸ்ட் அமைப்பினர்.

நீதித் துறையில் மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாக வில்லங்கத்தில் இறங்குவதற்கு என்றே ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளார்கள்.   இந்த அமைப்பினர் மனித உரிமை மீறல்கள் என வழக்கு தொடுப்பதும் பயங்கரவாதிகள் பிணையத்தில் வருவதற்கு முயற்சி எடுப்பதும்.  இந்த அமைப்பு நாடு முழுவதும் துவக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பினர் தான் டாக்டர் பினா சென்னுக்கு வாதாடியவர்கள்.  மாவோயிஸ்ட் தாக்குதல்களில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு ஆதரவாக சட்ட உதவிகளை கூட செய முன்வராத இந்த அமைப்பினர், மாவோயிஸ்ட்  பாதிக்கப்பட்டால், மனித உரிமை மீறல் என நீதிமன்ற படிக்கட்டுகளில் குவிந்திருப்பார்கள்.

தமிழகத்தில் Anti – Imperialist Moverment,  Indian Association for People’s Lawyers,  Students Uprising Movement for Social  Welfare,  Federation against Internal Repression – இவை மாவோயிஸ்ட் ஆதரவு அமைப்புகள்.   இந்த அமைப்புகளுடன் மக்கள் சிவில் உரிமை கழகம் என்ற பெயரில் இயங்கும் அமைப்பும் உள்ளது.  இந்த அமைப்பின் முக்கிய புள்ளிகள் என்றால் ஒருவர் பேரராசிரியர் அ.மார்க்ஸ், மற்றொருவர் பேராசிரியர் கல்யாணி.  இவர்கள் இருவரும் மாவோயிஸ்ட்களுக்காக நடத்தும் பேனா யுத்தம் புதுமையானது.

பேரராசிரியர் அ. மார்க்ஸ் தன்னுடைய தலைமையில் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளார். National Confederation of Human Rights Organization என்ற பெயர் கொண்ட  இந்த அமைப்பில் உள்ளவர்கள் மாவோயிஸ்ட்க்கு ஆதரவாக மாணவர்களை உருவாக்கியவர் என்ற குற்றச்சாட்டில் கைது செயப்பட்ட பேரராசிரியர் என்.சாபாபா, டாக்டர் ஜெ. தேவிகா, அட்வகேட் கே.பி. முகமது ஷெரீப், அட்வகேட் தங்கசாமி (திருநெல்வேலி), அட்வகேட் கார்த்தி, அட்வகேட் ஷகீல், அட்வகேட் ஜின்னா போன்ற பிரிவினைவாதிகளுக்கு வக்காலத்து வாங்கும் வழக்கறிஞர்கள்.  இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பேரராசிரியர் பி. கோயா.

பல மாநிலங்களில் பல்வேறு அமைப்புகள் செயல்பட்டாலும், மாவோயிஸ்ட்கள்  அகில இந்திய அளவில் வெகு ஜன அமைப்பு என்று ஒன்பது அமைப்புகளை உருவாக்கி, அதன் மூலம் பொதுமக்களிடம் தங்களின் கருத்துக்களை சேர்க்கும் காரியங்களில் ஈடுபடுகிறார்கள். மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாக மக்களை திரட்டுவதற்கு என 74 அமைப்புகளை நாடு முழுவதும்  உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.  இந்த அமைப்புகளின் பிரச்சாரங்கள் நேரடியாக மாவோயிஸ்ட் பிரச்சினைகளை வெளிப்படுத்தாமல், அந்தந்த அமைப்பின் நோக்கத்தை கூறி மாவோயிஸ்ட் ஆதரவாளர் சேர்க்கும்.

2016 ஜூன் 26 அன்று டெல்லியில் ஒரு செமினார் நடத்தப்பட்டது. இந்த செமினாருக்கு ஏற்பாடு செதவர்கள் Indian Association of People’s Lawyers  என்ற அமைப்பினர். ஆனால் அந்த அமைப்பின் பெயரில் நடத்தாமல், Constitution Club, New Delhi  என்ற அரங்கில் Stop War on People என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.  இந்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு கருத்துக் கூறியவர்கள் பட்டியலில்  வலது கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, பி.யு.சி.எல் அமைப்பின் ராஜீவ் யாதவ், கல்லூரி பேரராசிரியர் என்.ரகுராம் போன்றவர்களுடன் நடிகர், பெண் விடுதலை விரும்பிகள், இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள்.  இம் மாதிரியான கருத்தரங்கம் எல்லா மாநிலங்களிலும் நடைபெறுகிறது.  டெல்லி பல்கலை கழகத்தில் பயங்கரவாதி அப்சல் குருவிற்கு ஆதரவாக கருத்தரங்கம் நடந்து அதனால் ஏற்பட்ட கலவரம் பலருக்கு தெரிந்திருக்கும்.
டெல்லியில் நடந்த கருத்தரங்கம் போலவே சத்தீஸ்கர் மாநிலத்தில் ‘நீதியும் அமைதியும் காக்க’ என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. ‘சல்வா ஜுடும்’ என்ற அரசு ஆதரவு அமைப்பின் செயல்பாடுகளை விமர்சனம் செவதற்காகவே இந்தக் கருத்தரங்கம்.  அரசாங்கத்தை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கலந்து கொண்டவர்கள் முன்னாள் முதல்வர் அஜீத் ஜோகி, வலது சாரி கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் மனீஸ் குன்ஜம் என்பவர்.  சல்வாவுக்கு எதிராக இங்கிலாந்தின் சேனல் 4 மூலமாக ஒரு ஆவணப்படம் எடுத்து சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் காட்ட துணை போனது உள்ளூர் என்.டி.டி.வி.  தெரிந்து கொள்ள வேண்டும்.

மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாக களத்தில் உள்ள எழுத்தாளர்களின் பட்டியல் மிக நீளமானது.  பல பரிசுகளைப் பெற்ற அருந்ததி ரா இவர்களில் மிகவும் முக்கியமானவர். இன்றைக்கு இடது கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் சீதாராம் யெச்சூரியின் மனைவி திருமதி சீமா இஸ்தி, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் எடிட்டராக பணியாற்றுக்கிறார். இவரும் மாவோயிஸ்ட் ஆதரவாளர். சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தர் என்ற மலைவாழ் மக்கள் பகுதியில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை விசாரிக்க இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்கள் உள்ளடக்கிய பத்திரிகையாளர்கள் சங்கம் ஒரு குழுவை நியமித்தது.  இந்த குழுவின் உறுப்பினர்கள்  சீமா சிஸ்தி, பிரகாஷ் துபே, வினோத் வர்மா என்பவர்கள்.  இந்த மூவரும் இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள்.  குறிப்பாக மாவோயிஸ்ட்களின் தாக்குதல்களை பற்றி விசாரிக்காமல், சல்வா ஜுடும் அமைப்பினர் பத்திகையாளர்களை தாக்கியதாக கூறி விசாரிக்க சென்றார்கள்.

அருந்ததி ரா மாவோயிஸ்ட்களை பற்றி கூறும் போது, மாவோயிஸ்ட்கள் மீது அரசு தாக்குதல்களை நடத்தினால். பரம ஏழைகள் மீது போர் தொடுக்கிறார்கள்” என அறிக்கை விடுவார்.  மாவோயிஸ்ட் ஆதரவாளர்களின் கருத்துக்கள் வெளிவருவதற்கு உறுதுணையாக இருப்பது, தமிழகத்தில் ‘தி இந்து’ நாளிதழ். ‘தி இந்து’வின் பொறுப்பாளர் என். ராம் இடது கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய புள்ளி.   படிக்கிற காலத்தில் எஸ்.எஃப்.ஐ. என்ற மாணவர் அமைப்பின் துணைத் தலைவராக பணியாற்றியவர்.   இவர் கண்காணிப்பில் வெளி வரும் ‘தமிழ் தி இந்து’வில் முழுக்க முழுக்க இடதுசாரி சிந்தனைதான். அது மட்டுமில்லாமல், மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் எழுதும் புத்தகத்திற்கு விளம்பரம் கொடுப்பதும் முக்கிய பணியாக கொண்டு செயல்படுகிறார்கள்.  சென்னையில் துவங்கியுள்ள புத்தக கண்காட்சியில் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம் என்பதாக கூறி, ஒரு புதிய பகுதி உருவாக்கியுள்ளார்கள்.  கவனிக்க வேண்டிய ஐந்து புத்தகங்கள் என்ற தலைப்பில் பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன், அ.மார்க்ஸ் எழுதியது, டெங் ஷியோ பிங் – தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்  என மொழிப்பெயர்ப்பு நூல் … என மாவோயிஸ்ட் இடதுசாரி உள்ளடக்கம் கொண்ட பிரசுரங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன.