பாஜக அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்பது தெரியவந்துள்ளது வெற்றியின் விளிம்பை கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது
மகாராஷ்டிரா ஹரியானா தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் நேற்று வெளியிடப்பட்டது அதில் ஆளும் கட்சியான பாஜக சிவசேனா மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது. மகாராஷ்ட்ராவில் 60.41 சதவீதமும் அரியானாவில் 68.30% வாக்குகள் பதிவாகியுள்ளது
2014ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் 2014 தேர்தலில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. பாஜகவின் கொள்கையான தேசியவாதம் பெரும் வரவேற்பை பெற்றது மகாராஷ்டிராவில் அது மட்டும் இல்லாமல் அங்கு உள்ள உள்ளூர் பிரச்சனைகளை சரி செய்ய பாஜக அழுத்தம் கொடுத்தது. காங்கிரஸ் தாங்கிக் கொள்ள முடியாமல் திணறியது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாஜக அடுத்து வந்த பாஜக அதனை சரியாக கையாண்டு பிரச்சினைகளை சரி செய்து திறம் பட செயல் பட்டு வந்தது. அதன் மூலம் இப்போது நடந்து முடிந்த தேர்தலில் கருத்துக்கணிப்பு பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பது தெரியவந்துள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 258சட்டமன்றம். 166 முதல் 263 வரை பாஜக சிவசேனா கூட்டணி கைப்பற்றும் என்றும் சட்டமன்றத்தில் 155 இடங்களில் கொண்டிருந்தது பாஜக சிவசேனா கூட்டணி. காங்கிரஸ் என்சிபி கூட்டணி 48 முதல் 90 வரை இடங்களை கைப்பற்றும் என்றும் வெளியிடப்பட்டுள்ளது
அரியானாவில் வெளியேறிய கருத்துக்கணிப்பில் 90 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டது பாஜக 70 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்றும் 20 இடங்களை காங்கிரஸ் பிடிப்பது என்பது பெரும் சவாலாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
வரும் வியாழக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடப்பது நாம் அறிந்ததே. கணிப்பாளர்களின் சரியானதா என்பதை பார்ப்போம்