மறக்க முடியாத நிகழ்வுகள்

பிரான்காய்ஸ் காத்தியே என்ற பிரெஞ்ச் தேசத்தை சார்ந்த, பாரதத்தின் மீது பெரும் அபிமானம் கொண்ட இவர் ஒரு ஓவியக்காட்சி நடத்தினார்.  அதில் அவுரங்கஜீப் செய்த கொடுமைகளும் இன்ன பிற சமாச்சாரங்களும் இருந்தன. ஆற்காட்டு நவாபே வந்துவிட்டார் பரிவாரங்களோடு.  ‘நீ எடுக்கிறாயா இல்லை நான் எடுக்கவா’ என்று கேட்டார்.  எதற்கு வம்பு, தன் வட்டாரத்தில் கலவரம் வந்தால் ஒரு தாங்கும் சக்தி இல்லை என்று காவல் துறை ஆய்வாளர் முதல் பலரும் நிர்பந்திக்க எடுத்தார் காத்தியே.  இதென்ன அநியாயம், கருத்து சுதந்திரத்துக்கு இது பாதிப்பு இல்லையா, வரலாற்றில் உள்ளதை, உங்கள் புத்தகங்களில் பெருமையுடன் கூறப்பட்டதைத்தானே ஓவியமாக வரைந்துள்ளேன் என்று கூறியதற்கு யாரும் எந்த விளக்கமும் தரவில்லை.   என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள், அதுவும் எப்போதும் போல கூட்டமாக வந்து, எடுத்துவிடுங்கள் என்று கூறிவிட்டார்கள்.  அவர்கள் நினைத்தால் எதுவும் செய்ய முடியும் என்று காண்பித்தார்கள்.  அந்த இடத்தில் கருத்து சுதந்திரம் பேச்சுரிமை விடுமுறை எடுத்துக்கொண்டது.  பாதிப்பு முஸ்லிம்களுக்கல்லவா?sagippu-thanmai

நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் என்றொரு படம் எடுத்தார்.  அதில் முஸ்லிம்களை பற்றி பொய்யாகவோ, அதீதமாக சித்தரித்தோ எதுவும் கூறிவிடவில்லை.  என்ன நடக்கிறதோ அதைத்தான் காட்டியிருந்தார்.  தணிக்கை செய்யப்பட்ட ஒரு படம்.  மாதக்கணக்கில் தடுக்கப்பட்டது.  அவர் கடனால் தெருவுக்கே வந்துவிட்டார்.  பேச்சுவார்த்தையின்போது, நாங்கள் நீக்க சொல்லும் காட்சிகளை நீக்கவில்லையென்றால் வெடிகுண்டு தயார் செய்து வைத்திருக்கிறோம், போட்டுவிடுவோம் என்று சொன்னேன் என்று PJ என்பவர் வெளிப்படையாக தந்த பேட்டி இன்னமும் யூடியூபில் உள்ளன.  அரசாங்கம் முஸ்லிம்கள் பக்கம் நின்றது.  கமல்ஹாசனின் கருத்து சுதந்திரம்? கமல்ஹாசனின் உரிமைக்கு மதிப்பு தந்தால் பாதிப்பு முஸ்லிம்களுக்கல்லவா?

INNOCENCE OF MUSLIMS என்றொரு படம்.  அமெரிக்காவில் எடுக்கப்பட்டது.  இதற்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை.  படம் வெளியிடப்படவும் இல்லை.  வெறுமனே, யூடியூபில் சில காட்சிகள் கசிந்தன.  இதற்கும் பாரதத்துக்கும் என்ன சம்பந்தம்?  இங்கு ஏன் ரகளை செய்கிறோம்?  எதுவுமே தெரியாது.  அனுமதி இல்லை என்று மறுக்கப்பட்ட  பின்னும் எல்லாமே போச்சு என்று 20,000 பேர் கொண்ட பெரும் கும்பல் ஒன்று அமெரிக்க தூதரகத்தை நோக்கி படை எடுத்தது.  போகும் வழியில் உள்ள கடைகளை நாசம் செய்தார்கள்.  வாகனங்களை சேதப்படுத்தினார்கள்.  இன்னமும் அந்த காணொளி இணையதளத்தில் உள்ளது.  அந்த படத்தை எடுத்தது அந்த இயக்குனரின் உரிமை, சுதந்திரம்.  எதற்கு இந்த போராட்டம்?  அதுவும் இங்கு?  அதுவும் அரசாங்க உத்தரவை மீறி?  பாதிப்பு முஸ்லிம்களுக்கல்லவா?

பல ஆண்டுகளுக்கு முன் வந்த ‘மின்சார கனவு’ என்றொரு படம்.  கடைசி காட்சியில் கதாநாயகன், தன் காதலை சொல்ல பெரிதும் தயங்குவதாகவும் பின் அதை தெரியப்படுத்துவதே இறைவனின் சக்தியால் செய்ததாகவும், இறைவனை இவ்வாறு அதனால் அவன் பாதிரியாராக ஆவதாக கதை முடியும்.  நாங்கள் எவ்வளவு சிரமப்பட்டு பாதிரியாராகிறோம்?  நீங்கள் எப்படி எங்களை அப்படி காட்டலாம் என்று போராட்டம்.  அந்த காட்சி உடனே நீக்கப்பட்டது.  போராடியது கிறிஸ்தவர்கள் அல்லவா?

இதே போல ‘கடல்’ என்றொரு படம்.  அதற்கும் கிறிஸ்தவர்கள் போராடினார்கள். வெற்றி பெறுவதற்கும் படம் படு தோல்வி அடைந்தது.  அரசு ஆதரவு தெரிவிப்பதற்குள் படம் சுருளவே போராடி பயனில்லை என்று விட்டுவிட்டார்கள்.  ஊடகங்களும் முக்கியத்துவம் தந்தன.  போராடியது கிறிஸ்தவர்கள் அல்லவா?

ரோஜா, பம்பாய், துப்பாக்கி போன்ற படங்களுக்கும் இதே நிலை.  காரணம் போராடியது முஸ்லிம்கள்.  இதை ஒரு அருமையான வியாபாரமாக இருவரும் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் போலும்.  தடை கோரினால், வெளியிட பணம் தரவேண்டும்.  தடை கூறுவதால் மாபெரும் விளம்பரம் இலவசம்.

சாத்தானின் கவிதைகள் புத்தகம் சல்மான் ருஷ்டீ எழுதியது.  இல்லாததையா எழுதினார்?  தவறாக இருந்தால் வழக்கு போட்டு சந்தியில் நிறுத்தியிருக்கவேண்டும்.  தலையை வாங்கு என்று நூற்றுக்கணக்கான பத்வாக்கள். முதல் பத்வாவை வெளியிட்டது ஈரானின் தலைமை மதகுரு அயதொல்லா கொமேனி.  பல கோடி பரிசு அறிவிக்கப்பட்டது.  அது இன்னமும் நிலுவையில் உள்ளது.  ருஷ்டீயின் கருத்து சுதந்திரம்?  அதை பற்றி கவலை வேண்டாம்.  ஏனென்றால் போராடியது முஸ்லிம்கள் அல்லவா?

இதே போல லஜ்ஜா என்ற நாவலை தஸ்லிமா நஸ்ரீன் எழுதினார்.  தடை, கலவரம், கொலை மிரட்டல், கல் வீச்சு என்று போராட்டம்.  இரவோடு இரவாக தப்பித்தார்.  இந்தியா வந்தார்.  இன்னமும் நம் நாட்டில் அகதியாக வாழ்கிறார்.  தஸ்லிமாவின் கருத்து சுதந்திரம்?  அதை பற்றி கவலை வேண்டாம்.  ஏனென்றால் போராடியது முஸ்லிம்கள் அல்லவா?

வினாத்தாளில் முஹம்மது என்ற பெயரை உபயோகப்படுத்தியதற்கு ஆசிரியரின் கையை வெட்டலாம்.  ஹிந்துக்கள் உருவ வழிபாடு செய்கிறார்கள் என்று கோயிலுக்குள் புகுந்து விக்கிரகங்களை உடைக்கலாம்.  ஏனென்றால் போராடியது முஸ்லிம்கள் அல்லவா?

இன்னமும் இஸ்லாமுக்கு எதிராக பேசினால் பாகிஸ்தானில், பங்களாதேஷில், சவுதியில் கொலை தண்டனை உண்டு.

ஹிந்துக்களுக்கு?  ராவணன் என்ற படத்தில் ராமன் கதாபாத்திரத்தை சிறுமைப்படுத்தி காட்டலாம்.  பாவமன்னிப்பு என்ற படத்தில் ஹிந்துவை  மோசமாக காட்டி, முஸ்லிமையும், நல்லவராக காட்டலாம்.  காஞ்சி தலைவன் படத்தில் எம்ஜிஆர் மஹான் திருநாவுக்கரசரிடம் கடுமையாக நடந்து கொள்வார், கடுகடுவென்று நடந்து கொள்வார்.  காரணம், அவர் திமுகவில் இருந்தார் அன்று.  பாரத விலாஸ் படத்தில் ஹிந்துவை மத அடையாளங்கள் எதுவுமின்றி காட்டி, முஸ்லிம்களுக்கும், எல்லாம் இருப்பது போல காட்டலாம்.  வேலையில்லா பட்டதாரி படத்தில் ராமகிருஷ்ணா பள்ளியை மட்டமாக பேசலாம்.  இறைவன் இல்லை என்று நடிகர் விவேக் பக்கம் பக்கமாக வசனம் பேசலாம்.  கோயிலுக்கு எதிரேயே ஈவே ராமசாமி நாயக்கரின் சிலையையும் கடவுளை கண்டுபிடித்தவன் அயோக்கியன் என்றும் பொறித்து வைக்கலாம்.  தாலி தேவையா என்று நிகழ்ச்சி நடத்தலாம்.  இதெல்லாம் ஹிந்துவை பாதிக்கும் நிகழ்ச்சிதான்?  அதனால் அரசு ஆதரவு தெரிவிக்கவில்லை.

பெருமாள் முருகன் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்.  ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை சொல்லி, மிகவும் மோசமாக, அச்சில் ஏற்ற முடியாத இழிவு படுத்தி    ஆதாரங்களுடன் எழுதினேன் என்று கூறியவர் எங்கே ஆதாரம் என்று கேட்டதற்கு இன்றுவரை தரவில்லை.  மருத்துவர் ராமதாஸ் ஒரு சமுதாயத்தின் பெயர் சொல்லி எப்படி இது போல  நீதிமன்றம் குறுகிய பார்வையுடன் தீர்ப்பளித்துள்ளது என்று  மிகவும் சரியாக கண்டித்திருக்கிறார்.   பெருமாள் முருகன் எழுதிய கதை வேறு மதத்தவர் பற்றி இருந்திருந்தால், அரசாங்கமோ, நீதிமன்றமோ, மற்ற கட்சிகளோ, அந்த மதத்துக்காரர்களோ இப்படித்தான் நடந்துகொண்டிருப்பார்களா? தனிப்பட்ட கருத்த கொண்டவர்கள் நீதிபதிகளாக அமர்ந்தால் தீர்ப்பு சொல்லும்போது அந்த எண்ணங்களை நீக்கிவிட்டு நீதிபதியாக அல்லவா அமர்ந்து கூறியிருக்கவேண்டும்?  அதை கண்டித்தால் நீதிமன்றமே அவரை எழுத விடுங்கள் என்று, ஜனநாயக நாட்டில் இருந்துகொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசின் முடிவை மீறி, காலேஜியம் முறைக்குள் அடங்க மறுக்கும் ஒரு நீதித்துறை சொல்லும், எது நீதி என்று.  இதை இந்த ஹிந்து ஆட்டு மந்தை கூட்டம் கேட்டு தலையாட்டிவிட்டு போகவேண்டும்.

நண்பர்களே, ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.  அரசு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது உண்மையா அல்லது மக்கள் இதை கண்டுகொள்ளவில்லை என்பது உண்மையா?  மக்களின் மெத்தனப்போக்கு இதில் தென்படவே இல்லையா?  வெறுமனே பத்து பேர் அமைதியாக கேட்டவுடன் தடை செய்ய, நடவடிக்கை எடுக்க அரசு இயந்திரம் என்ன வேலையில்லாதவர்களா?

குஜ்ஜார் கலவரம்.  ஊரே ஸ்தம்பித்தது.  அரசு பணிந்தது.  படேல் கலவரம்.  ஊரே ஸ்தம்பித்தது.  அரசு பணிந்தது.  மக்கள் இறங்கி போராடவில்லை என்றால், விழிப்புடன் இருக்கவில்லை என்றால் கலியுக அரசுகள் கண்டுகொள்ளாதுதான்.

அசோகவனத்தில் சீதையை பார்த்த பின் அனுமன் அந்த வனத்தை அழிக்கிறார்.  பல ஆயிரம் பேரை கொன்றார். இந்திரஜித் வந்து கைது செய்து ராவணன் முன் கொண்டு சென்றான்.  அனுமன் ராமனை பற்றி எச்சரித்து லங்கையை அழித்துவிட்டு சென்றான்.  சும்மா போய் நின்று எனக்கு ராவணனை பார்க்க வேண்டும் என்று சொன்னால் அனுமதி கிடைத்திருக்குமா?  மன்னன் முன் நிற்க, பேச, கருத்துக்களை சொல்ல கலவரம் செய்தால்தான் நடக்கும் என்று சொல்லாமல் சொல்லும் அரசு இது. ஊரை ஸ்தம்பிக்க வைத்தால்தான் என்னவென்று கவனிப்போம் என்று எண்ணும் அரசு இது.

யாரோ ஒரு சலவை தொழிலாளி, ஏதோ ஒரு ஊரில் என்னவோ சொன்னார் என்பதற்காக மனைவியை காட்டுக்கு அனுப்பிய ராமன் எங்கே?  ஒரு மாடு வந்து நீதி கேட்டு மணியடித்தது  என்று ஒரே மகனை தேர்க்காலிட்ட மன்னன் எங்கே?  மக்களுக்கு என்ன குறை என்று தேடித்தேடி சேவை புரிந்த காலம் போய், கலவரம் செய்தால்தான், ஊடகங்களில் வந்தால்தான், பலருக்கு இன்னல் விளைவித்தால்தான் அது போராட்டம் என்று எண்ணும் இந்த அரசுகள் எங்கே?

மக்கள் ஒன்றிணையும் வரை, அவமானங்கள் ஒரு தொடர்கதைதான்.