பிகார் மாநிலத்தைச் சோ்ந்த ராம் விலாஸ் பாஸ்வான், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் உணவு, பொது விநியோகம், நுகா்வோர் விவகாரங்கள் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். தலித் சமூகத்தைச் சோ்ந்த முக்கியத் தலைவராக அறியப்பட்டவா் பாஸ்வான்.
உடல்நலக் குறைவால் தில்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக அவா் சிகிச்சை பெற்று வந்தார். 3 நாள்களுக்கு முன் அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், மருத்துவமனையில் வியாழக்கிழமை மாலை அவரது உயிர் பிரிந்தது. இதை, அவருடைய மகன் சிராக் பாஸ்வான் சுட்டுரைப் பதிவின் மூலம் அறிவித்தார். அதில், ‘அப்பா, இன்று இந்த உலகில் நீங்கள் இல்லை. எங்கிருந்தாலும் நீங்கள் என்னுடன் இருப்பதை அறிவேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.