மதப்பிரச்சனை செய்யும் மாணவிகள்

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம், மதப் பிரச்சனையை துண்டும் வகையில் வேண்டுமென்றே ஆறு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். வகுப்பறையில் அவர்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. மதப் பிரச்சனையை தூண்ட இதனை நல்வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட மாணவிகள், ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர். வழக்கம்போல முஸ்லிம் மாணவிகளின் ஹிஜாப் போராட்டத்துக்கு காங்கிரசும் ஆதரவு தெரிவித்தது. கல்லூரி நிர்வாகம் உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் புகார் அளித்தனர். இந்நிலையில் முஸ்லிம் மாணவிகளின் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, குந்தாப்பூர், ஷிமோகா, பத்ராவதி உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு பி.யூ. கல்லூரிகளில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஹிந்து மாணவர்கள் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, “மாணவர்கள் கல்லூரிக்கு வருவது வழிபாடு நடத்த அல்ல. மத அடையாளங்களை வழிபாட்டு தலங்களுடன் நிறுத்திக் கொள்ளவேண்டும். ஹிஜாப், காவித் துண்டு ஆகியவற்றை கல்லூரிக்குள் அனுமதிக்க முடியாது. நாம் அனைவரும் பாரத தேசத்தவர்கள் என்ற ஒன்றுபட்ட மனோநிலைக்கு வர வேண்டும். அனைத்து மாணவர்களும் பாரத மாதாவின் பிள்ளைகள் என்பதை உணர வேண்டும்” என்றார்.